அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 22 டிசம்பர், 2014

ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் என் அடிவயிற்று எரிச்சலும்!!!

நம் நாட்டு அரசியல் சட்டப்படி, அத்தியாவசிய உணவுப் பொருளான பாலை அதிக விலைக்கு விற்பது குற்றம்; அதில் தண்ணீர் கலப்பது குற்றம்; தரையில் கொட்டுவது [விவசாயிகளின் போராட்டத்தில்...] குற்றம். உண்மை இதுவாயிருக்க, ஒரே நேரத்தில் பத்தாயிரம் லிட்டர் பாலை ஒரு கற்சிலையின் மீது கொட்டியிருக்கிறார்களே, இது குற்றமில்லையா?

ஐந்தறிவு ஜீவன்களில் ஒன்றான குரங்கின் ரூபத்தில் இருந்தாலும், ராமாயணக் கதையில் முக்கிய பங்கு பெற்றதால் பன்னெடுங் காலமாக, அதையும் ஒரு தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள்.

காசு பணம் கொடுத்து ஏழைகளின் துன்பம் போக்குதல்; உடல் உழைப்பை ஈந்து உரியவர்களுக்கு உதவுதல் என்றிப்படிப் பிறருக்கு உதவுவதன் மூலம் மனச் சாந்தி பெறுவதற்கான வழிகள் எத்தனையோ இருக்கக் கடவுளை வழிபடுவதன் மூலமாகத்தான் அதை முழுமையாகப் பெற முடியும் என்று நம்புகிறவர்கள் நம்மில் மிகப் பலர்.

கடவுளை நம்பட்டும்; வழிபடட்டும். அதை ஆட்சேபிக்க எவருக்கும் உரிமையில்லை.

வழிபாடு என்னும் பெயரால் எத்தனையோ மூடத்தனமான செயல்களில் நம்மவர்கள் ஈடுபடுகிறார்கள். படட்டும். அவற்றைத் தடுக்கவும் பிறருக்கு உரிமையில்லை.

ஆனால்.....

பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என்பன போன்ற படு மூடத்தனமான செயல்களில் ஈடுபட்டு, அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளான மேல் குறிப்பிட்டவை போன்ற பொருள்களைக் கணக்கு வழக்கில்லாமல் அழித்தொழிக்கிறார்களே, இது என்ன நியாயம்?

இந்த அழிப்பு வேலை தினசரி எண்ணற்ற கோயில்களில் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே.

வறுமை தாண்டவமாடும் ஏழைகள் பெரும்பான்மையாக உள்ள இந்த இந்தியத் திருநாட்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.

இது குற்றம் என்பதை அறிந்தவர்கள்கூட கண்டிப்பதில்லை. அரசுகளும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

இது கடவுளின் பெயராலும், பக்தியின் பெயராலும் நடைபெறுவதால்தான்.

இம்மாதிரிக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக் கோயில்களில் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று..........

21.12.2014 இல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றிருக்கிறது.

அதை என் வாயால் சொல்ல வேண்டாம். ஒரு தினசரி அதைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. படியுங்கள்.

செய்தித் தலைப்பு:  

            நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
செய்தி:

‘அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்குப் பத்தாயிரம் லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்....’ என்று தொடர்கிறது செய்தி.

ஆக, காலங்காலமாகச் சிலர்[ஜாதிப் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை] பக்தியின் பெயரால் ஆரம்பித்து வைத்த இந்தக் குற்றச் செயலுக்கு 21.12.2014இல் நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கான நம் பக்தர்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச் செயல், இதே நாளில் இன்னும் ஏராளமான கோயில்களில் நடைபெற்றிருக்கிறது.

பத்திரிகைச் செய்தியைப் படித்ததிலிருந்து [ஐயோ...பத்தாயிரம் லிட்டர் பால் வீணானதே!!!]என்று  என் அடிவயிறு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

இந்த எரிச்சல் மருந்துகளால் தீராதது. காலம் காலமாக மக்களின் துயர் போக்கி அருள்பாலிக்கிற ஆஞ்சநேயக் கடவுள்தான் இந்த எரிச்சலையும் போக்கியருள வேண்டும்.

ஜெய் ஆஞ்சநேயா!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx









6 கருத்துகள்:

  1. பாலுக்கு அழுகிற குழந்தைகள் நிறைந்த நாட்டில் இப்படி கற்சிலைகள் மீதும் ,நடிகர்கள் கட் அவுட்கள் மீதும் பாலைக் கொட்டுபவர்கள் தான் சிந்திக்க வேண்டும் !முட்டாள்தனமான காரியங்கள் என்று நிற்குமோ ?கமலஹாசன் வசனம் தான் நினைவுக்கு வருகிறது ...கடவுள் இல்லையென்று சொல்லவில்லை ,இருந்திருந்தால் நல்லாயிருக்குமே என்றுதான் சொல்கிறேன் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்யும் வெட்டிப் பயல்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை.

      தேதி குறிப்பிடுவதில் நேர்ந்த பிழையை முன்பொரு முறை நீங்கள் தான் சுட்டிக் காட்டினீர்கள். [இந்தப் பதிவில் நேர்ந்த பிழை குறித்து நான் போட்ட பதிவைப் பார்த்திருப்பீர்கள்]

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. இந்த மயக்கம் எத்தனை பெரியார் வந்தாலும் தீராது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர வேண்டும் என்றுதான் நாமும் ஆசைப்படுகிறோம். என்ன செய்ய?

      நீக்கு
  3. பதில்கள்
    1. தாமரைப் பூ, அலரிப் பூ போன்ற பூ வகையறாக்களில் சிலவற்றையோ பலவற்றையோ, பால், தயிர், நெய், பசுச் சாணம், இளநீர், சந்தனம் போன்றவற்றில் விரும்பியவற்றோடு கலந்து.....

      பஞ்ச பிரம்மத்தினால்[இது என்னவென்று எனக்கும் தெரியாது ஏலியன்] பூஜித்து சாமி சிலைமீது கொட்டி, சுலோகங்கள் சொல்லி, பூஜை செய்வது[அபிஷேகம்] என்று சொல்கிறார்கள்.

      விவரம் தெரிந்த நாள் முதல் இந்த அபிஷேக ஆராதனைகள் எல்லாம் நான் செய்ததில்லை.

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறோம். மகிழ்ச்சி.

      நன்றி ஏலியன்.

      நீக்கு