செவ்வாய், 20 ஜனவரி, 2015

பெருமாள் முருகனுக்கு ஒரு மனம் திறந்த மடல்!

அன்புள்ள பெருமாள் முருகன்,

மாதொருபாகன் சர்ச்சை தொடர்பாக ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சூட்டோடு, “அவனை விட்டுவிடுங்கள்” என்று உருக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டீர்களே நினைவிருக்கிறதா? உங்கள் வேண்டுகோளை ஏற்று, போராட்டக்காரர்கள் அமைதி காக்கிறார்கள். ஆனால், உங்களை ஆதரிப்பதாகச் சொல்லி, அரசியல்வாதிகளும் சில பிரபல எழுத்தாளர்களும் அறிக்கை மேல் அறிக்கை  விடுகிறார்கள்.

‘தமிழ்நாடு அரசைக் கண்டித்து, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்’ -இது இன்றைய செய்தி.

சமரசக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இவை பற்றிய உங்கள் விருப்பமின்மையை ஊடகங்கள் மூலம் நீங்கள் அறியச் செய்ததாகத் தெரியவில்லை. இக்காரணத்தால், இவர்களின் செயல்பாடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாகிறது.

இந்தவொரு சூழலே இப்பதிவு எழுதக் காரணமாக அமைந்தது

உங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப மாதொருபாகனில் நீங்கள் காட்சிப்படுத்திய நிகழ்வுகளால் மனம் நோகடிக்கப்பட்ட மக்கள், குறிப்பாகக் கவுண்டச் சாதிக்காரர்கள் நிறைய.

சுய சாதியைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாதவர்களைக்கூட, ஜாதி மீது அனுதாபம் கொள்ள வைத்திருக்கிறது உங்களின் மிகையான கற்பனைக் கதை.

நீங்கள் திருச்செங்கோட்டை ஒட்டியுள்ள கூட்டப்பள்ளி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தி. கோட்டிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்.

உங்களைப் போலவே எனக்கும் தி.கோடு டவுனின் சந்துபொந்தெல்லாம் பரிச்சயம்தான்.

நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் தேர்த்திருவிழாவுக்கு[குறிப்பாக நாலாம் திருவிழா] வந்து போவது வழக்கம்.

பழைய நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு கதை புனைந்ததாக நீங்கள் சொல்லிக்கொண்டாலும் கதையைப் படிக்கும் மேற்கண்ட ஜாதிக்காரர்கள் இவற்றை அண்மைக்காலச் சம்பவங்கள் என்றே நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையின் விளைவாக, அவர்களின் உள்மனதில் வேண்டத்தகாத சில சந்தேகங்கள் முளைக்கும் என்பது நீங்கள் அறியாததல்ல.

நீங்கள் குறிப்பிடும் அந்தச் ‘சாமி குழந்தை’ அவர்களை எப்படியெல்லாமோ யோசிக்க வைக்கும்; விதம் விதமான கற்பனைகளில் மிதக்கச் செய்யும். அவர்களின்  மூதாதையர் பிறப்பு பற்றியே சந்தேகம் கொள்ள வைக்கும்.

நீங்கள் கவுண்டர் ஜாதியையைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு இந்தப் பாதிப்புகள் நேர்ந்திருக்காது. ஏனென்றால், இது முழுக்க முழுக்கக் கற்பனையானது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமன்றி, கலப்பு மணம் புரிந்த நீங்கள்[பாராட்டுகள்] ஜாதிப்பற்றே இல்லாதவர் என்பதும் நம்பத்தக்க ஒன்றுதான்.

மிகப் பல ஆண்டுகளாக, இந்தக் கோவிலுக்கு வந்து போன கவுண்டர் ஜாதிக் குடும்பங்களில் எத்தனை எத்தனை ‘சாமி குழந்தைகள்’ இருப்பார்களோ என்று வரலாற்று ரீதியாகப் புள்ளி விவரம்  சேகரிக்கும் பிற ஜாதிக்காரர்கள் முன்னிலையில் கவுண்டனைக் கூனிக் குறுகி நடக்க வைக்கிற தவற்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். [எவ்வளவு பெரிய மனிதரும் இதற்கு விதிவிலக்கல்ல. காந்தியே ‘இமாலயத் தவறு’ செய்துவிட்டதாக வருத்தப்பட்டிருக்கிறார்].

என் வாலிப வயதில், ’சந்தை’ மூலம் பிரபலம் ஆன அந்தக் கோயிலைப் பற்றி இப்படியொரு வதந்தி[மலட்டுப் பெண்கள் கண்டவனோடு கூடிக் கர்ப்பம் தரிப்பது] உலவியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்தக் கோயில் என்பது உங்களுக்குத் தெரியும். வெளிப்படையாகச் சொன்னால், இன்னொரு பெரிய பிரச்சினைக்கு அது வழி வகுத்துவிடும்.

உங்கள் கதையில் குறிப்பிடுவதுபோல், மாட்டு வண்டி கட்டிக்கொண்டு எங்கள் கிராமமே திரண்டு போகும். பலதடவை அந்தக் கோயிலுக்குச் சென்றுள்ள என் பார்வையில் குழந்தைக்காக ஆம்பிளை தேடித் திரியும் மலடிகள் தென்பட்டதே இல்லை. தி.கோடு கோயிலிலும் அம்மாதிரிப் பொம்மணாட்டிகளை நான் சந்தித்ததே இல்லை. தொழில் ரீதியாக அலையும் ‘இரவு ராணி’களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

அனைத்துச் சாதியாருக்கும் பொதுவாகக் கிளப்பப்பட்ட ஒரு வதந்தியைக் கவுண்டர் ஜாதிக்குரியதாக இட்டுக்கட்டிவிட்டீர்கள். இதை உங்கள் மனசாட்சி அறியும்.

கவுண்டச் சாதியின் பழக்க வழக்கங்களைக் களமாக வைத்தே கதை எழுதிப் பிரபலம் ஆனவர் நீங்கள். கதைதானே என்று எழுதப்போய், உங்களை அறியாமல் அவர்களை இழிவுபடுத்தி விட்டீர்கள்.

இது நம் ஜாதி. இதைப் பற்றி எதையும் எழுதலாம் என்று நினைத்திருப்பீர்கள் போல. பிற ஜாதிக்காரர்கள் செய்யத் தயங்கும் காரியத்தை நீங்கள் துணிந்து செய்துவிட்டீர்கள். அதோடுகூட, கவனப் பிசகாக, இன்னொரு  பெரும் தவற்றையும் செய்துவிட்டீர்கள்.

“இந்த ஊரில் இன்னிக்கி எல்லாரும் தேவடியாதான். நம்மை எவனும் தேடி வரமாட்டான்” என்று விலைமகளிர் சொல்வதாக எழுதியதைத்தான் சொல்கிறேன். இதன் மூலம் அனைத்து ஜாதிக்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டீர்கள்.

முருகன்,

இந்தத் தவறுகளால் விளையவிருந்த தொல்லைகளிலிருந்து  விடுபடுவதற்கு,  நீங்கள் மன்னிப்புக் கேட்டது ஏற்றதொரு நல்ல  வழிதான். இதனால் உண்டான மனக் காயத்துக்குக் காலமே உரிய மருந்தாகும். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு, மனம் தேறி எழுத்துப் பயணத்தை உங்களால் தொடர முடியும். மேலும் மேலும் புகழ் ஈட்ட முடியும். இப்படியொரு நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு மாறாக, எழுத்தாளனின் உரிமை பறிக்கப்படுவதாகச் சொல்லிக்கொண்டு உங்களைக் கொம்பு சீவிவிடும் ஆரவாரக் கும்பலின் பின்னால் நீங்கள் சென்றால்......

அது உங்களுக்கு நன்மையாக அமையலாம்;  தீமையாகவும் முடியலாம். 

மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.                       அன்புடன்,
                                                                                                            ‘பசி’பரமசிவம்.

=============================================================================================

பெருமாள் முருகன் மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோரும் அறிந்துகொள்வதற் காகவே இந்தப் பதிவு.

அந்தப் பிரபலங்கள்’ இதைப் படிப்பார்களா என்பது சந்தேகமே. ஏதோ ஒருவகை விருப்பம் காரணமாக இதை வெளியிடுகிறேன்.

============================================================================================

                                                                                 







  

37 கருத்துகள்:

  1. நண்பர் பரமசிவம் அவர்களே அருமையான பதிவு. பெருமாள் முருகனை விடுங்கள், தங்களை முற்போக்கானவர்கள் என்று கூறிக்கொண்டு வக்காலத்து வாங்கும் மகாத்மாக்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி ராஜாராமன்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. சூழ்நிலை காரணமாக இன்றுதான் வலைப்பக்கத்தில் நுழைந்தேன்.

      அவசியம் உங்களின் புதிய பதிவுகளை வாசிப்பேன்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. படித்தேன். கருத்து சொல்லத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. மாதொரு பாகன் படிக்கவில்லை! இருந்தாலும் ஒரு கற்பனைக் கதைக்கு இத்தனை போராட்டமா என்று தோன்றியது! அதன் உள் விவகாரங்களை பலரின் பதிவுகள் மூலமும் உங்கள் பதிவின் மூலமும் அறிந்து கொண்டேன்! பெருமாள் முருகன் செய்தது தவறுதான்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசத்தும் எழுத்து நடை. விறுவிறுப்புக் குன்றாமல் கதை சொல்லும் திறன். தனித்துத் தெரியும் வித்தியாசமான எழுத்தாளர் பெருமாள் முருகன். கதை அமைப்பில் தவறு நேர்ந்திருக்கிறது.

      இழந்த நிம்மதியை அவர் மீண்டும் பெற வேண்டும் என்ற விருப்பம் காரணமாகவே இந்தப் பதிவை எழுதினேன்.

      நன்றி சுரேஷ்.

      நீக்கு
  6. நடுநிலையாக , நியாயமாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே... தங்களது பதிவின் மூலமே எல்லா விடயங்களும் அறிந்து கொண்டேன். சிலர் கதையே இல்லாத திரைப்படங்களை ஓட வைப்பதற்காக புதுமையாக படம் எடுத்த அவர்களே வழக்கு தொடுத்து பிரபலப்படுத்தி ஓட விட்டு விடுவார்கள் அதைப்போல்தான் எனக்கு தோன்றுகிறது இப்பொழுது இவர் உலகறியப்பட்டாரே, ஒருவேளை......
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகறியப்பட்டாலும், செய்த தவறுக்காக வருந்தும் மனம் படைத்தவர் இவர்: பண்பாளர். என் நண்பரும்கூட.

      அவருக்கு அறிவுரை சொல்லும் தகுதியெல்லாம் எனக்கில்லை. எச்சரிக்கை செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. விவகாரம் எழுந்தபோது மாதொருபாகனை நான் படித்திருக்கவில்லை.அதனால் கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பது தவறு என்றே நினைத்திருந்தேன்.ஆனால் அந்த நூலின் ஆதரவாளரகளின் புண்ணியத்தால் இப்போதுதான் படிக்க முடிந்தது."இந்த ஊரில் இன்று எல்லோரும் தேவடியாதான் நம்மைத் தேடி யாரும் வரமாட்டார்கள்"என்ற அந்த ஒற்றை வரிக்காகவே அதனைத் தடை செய்யலாம் .ஒரு ஊரையே அசிங்கப்படுத்திவிட்டு கண்ணீர் விட்டு கதறி அனுதாபம் பெற நினைப்பது என்ன நியாயம்?உங்களுடைப் பதிவு அருமையானது மட்டுமல்ல நியாயமானதும்கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்.

      நன்றி வைத்தியலிங்கம் ரெங்கநாதன்.

      நீக்கு
  8. If my "GUESS" is correct, Vaa maNigaNdan belongs to a community which fights against this "novel". He wrote lots of caste-sensitive stories including "sakkili paiyyan" in his site. I am not giving the link here. If anybody interested go, google! In that story the "cowardly hero" (who can very well be a "gounder") talks about his helplessness regarding "caste-fucking-ism" and discrimination!

    Note, vaa maNigandan only brought down the "dalits" by writing that story with that "title".He did not write about "thiruchengode issue" then. I suspect he would have written such a story as it might bring his own community to bad light.

    Now, incidentally Pe. Murugan is writing about "gounder-related" community and bringing them to "bad light" in his story. Again,if I understand this situation correctly, pe murugan is writing about "some other community" not his own either! Do you see the "irony" here???

    Everyone, vaa maNkandan and pe murugan is only looking at others behind not their own!

    WHY is THAT??

    All our writers a closed-minded IDIOTS or WHAT??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருண்,

      மணிகண்டன், மாதொருபாகனை நாவலை எதிர்க்கிற கவுண்டரா என்பது உறுதிபடத் தெரியாவிட்டாலும், ‘சக்கிலிப் பையன்’ என்பது போல் caste-sensitive ஆகத் தலைப்புத் தரும் துணிச்சல்காரர்தான். ஆனால், தலித்துகளை இழிவுபடுத்தும் வகையில் கதைகள் எழுதியதில்லை. சக்கிலிப் பையனைச் சமமாக நடத்த இயலாத தன் கோழைத்தனத்தை எண்ணி ஒரு கவுண்டர் வருந்துவதாகக் கதை புனைந்திருக்கிறார். தமிழ்மணத்தில் படித்த ஞாபகம். நீங்களும் படித்திருக்கிறீர்கள். அதோடு, கவுண்டர்களின் அடாவடித்தனத்தால், முஸ்லீம்கள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாகவும் ஒரு கதை எழுதியிருந்தார்[கதைத் தலைப்பு மறந்துவிட்டது]; கண்டனங்களுக்கும் உள்ளானார்.

      இவரைப் போலவே, பெருமாள் முருகனும் தன் ஜாதிக்காரர்களை இழிவுபடுத்தி எழுதுவாரே தவிர மற்றவர்களை அவ்வாறு மட்டம் தட்ட மாட்டார்.

      இந்த முரண்பட்ட குணங்கள் பற்றி இவர்கள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இப்படி எழுதினால்தான் பாராட்டுக் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!

      கிடக்கிறார்கள், விடுங்கள்.

      நன்றி வருண்.

      நீக்கு
    2. ***மணிகண்டன், மாதொருபாகனை நாவலை எதிர்க்கிற கவுண்டரா என்பது உறுதிபடத் தெரியாவிட்டாலும், ‘சக்கிலிப் பையன்’ என்பது போல் caste-sensitive ஆகத் தலைப்புத் தரும் துணிச்சல்காரர்தான்.***

      மன்னிக்கணும் இதுக்கெல்லாம் துணிச்சல் எல்லாம் வேண்டியதில்லை! தலித்களில் பெருவாரியான சாதியை இப்படி தலைப்புக் கொடுத்து இவர் எழுதியிருந்தால் இவர் இப்போது சொர்க்கத்தில் கதை எழுதிக்கொண்டு இருப்பார். ஊருக்கு இளச்சவன் யாருனா இது மாதிரி "அப்பாவி தலித்கள்"! இதுக்கு துணிச்சல் எல்லாம் வேண்டியதில்லை. கம்ப்யூடரில் டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்!

      நான் அப்போவே சொன்னேன் இதுமாரி சாதித்தலைப்பு கொடுக்காதே என்று. உடனே அவர் ஏதோ நீலிக்கண்ணீர் வடித்து வியாக்ணம் கொடுத்தார்.

      இப்போ கவுண்டர் சாதிமேல் அவதூறு வரும்போது எல்லாரும் துள்ளிக் குதிக்க்கிறார்கள், அப்போ மணிகண்டன் புனைவை விமர்சிக்க எவனுக்கும் வக்கில்லை!

      தனக்குனு வந்ததும் அவன் அவன் சாதிச்சாயம் தப்புன்கிறான். இன்னொரு சாதிக்காரன்னா கேவலம்னு இவர் புனைவெழுதும்போது எல்லாரும் படித்து ரசித்தார்கள்.

      எளியவனை வலியவன் ஏறி மிதப்பதுதான் எங்கேயும் நடந்து கொண்டு இருக்கு.

      நீக்கு
    3. தலைப்பு அவ்வாறு இருந்தாலும், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று எழுதியதால் மணிகண்டன் தப்பினாரோ என்னவோ?!

      அது தவிர, அவர்கள் பெரும்பான்மை ஜாதிக்காரர்கள் என்றாலும் படித்தவர்கள், மற்ற தலித்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இணையப் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம்.

      பெருமாள் முருகனைக் கண்டிக்கும் போராட்டம் தேவையில்லை என்பதாகத்தான் கடந்த வாரத்தில் ஒரு பதிவிட்டேன்[http://kadavulinkadavul.blogspot.com/2015/01/blog-post_11.html]. படித்திருப்பீர்கள்.

      அவரை ஆதரிப்போரின் நடவடிக்கைகளாலும் பெருமாள் முருகனுக்குப் பாதகம் விளையலாம் என்று நினைத்ததால்தான் இதை எழுத நேர்ந்தது. பொதுவாக, ஜாதிகள் குறித்து எழுதுவதில் நாட்டம் இல்லாதவன் நான்; அதை வீட்டோடு வைத்துக்கொள்ள நினைப்பவன்.

      வழக்கம்போல, ஒளிவுமறைவு இல்லாமல் கருத்துச் சொன்னதற்கு நன்றி வருண்.

      நீக்கு
    4. வருண்,

      இன்றைய அவர்களின் நிலை நீங்கள் நினைப்பது போல்[அப்பாவி தலித்கள்] இல்லை.
      படித்தவர்கள் குறைவு என்றாலும், நாட்டு நடப்பை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

      தங்கள் ஜாதிக்குப் பாதிப்புகள் நேரும்போது, சாலை மறியல், உண்ணாவிரதம் என்று போராட்டங்களில் இறங்குகிறார்கள். அவர்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொண்ட எவரும் அவ்வளவு எளிதில் தப்பிவிட முடியாது.

      நீங்கள் அயல் நாட்டில் இருப்பதால் இங்கு இப்போதுள்ள சமூகச் சூழலை முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா தெரியவில்லை.

      நன்றி வருண்.

      நீக்கு
  9. சமூகத்தில் உள்ள ஒரு நிகழ்வை புனைவாக தருவதில் தவறு இல்லை அதற்கு பெருமாள் முருகன் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அவர் ஒரு உண்மையான ஊரையும், அவ்வூரின் கோவில் மற்றும் அங்கு உள்ள குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மக்களையும் புனைவின் உள்ளே கொண்டு வரும் பொழுது அது ஒரு ஆவணம் அல்லது சரித்திரம் ஆக மாறுகிறது.

    பெருமாள் முருகன் எழுதியது அந்த ஊரிலோ அல்லது நம் இந்திய நாட்டிலோ நடை பெறாத ஒரு நிகழ்வில்லை. அக்காலத்தில் கணவன் மலடாக உள்ளதால் குழந்தை பேரு இல்லாதவர்கள் ஒரு குழந்தையை பெற பின்பற்றியதில் இதுவம் ஒரு முறை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஏன் இக்காலத்திலும் இது நடை பெற்றுக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் இது குழந்தை இல்லாத எல்லா தம்பதியர்க்கும் ஒரு பொதுவான நிகழ்வாக எக்காலத்திலும் நாம் பொதுமைப்படுத்த முடியாது.

    ஏன் “மனு” என்ற நூலை எரிக்க வேண்டும் என்று பெரியார் வழி வந்த தோழர்கள் சொல்கிறார்கள்? ஏன் மனுவிற்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது ? ஏனென்றால் அதில் உள்ள செய்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவை. சூத்திரன் என்ற சொல்லை பெரியார் ஏன் எதிர்க்க வேண்டும்? புரட்சி பேசும் படித்தவர்கள் இப்பொழுது மஹாபாரதம் மற்றும் வேதங்களை தங்கள் துணைக்கு அழைப்பது நகைமுரண்.

    ஆனால் பெருமாள் முருகனோ இன்றும் ஒரு சமூகமாக வாழும் மக்கள் மற்றும் அவர்கள் நடத்தும் விழாவை பற்றி ஒரு தவறான தகவலை பதிவு செய்துவிட்டு புனைவு என்று நியாயப்படுத்த முயல்கிறார். அவர் தன் நாவலின் முன்னுரையில் தான் பல ஆய்வுகள் செய்து “திருச்செங்கோடு” பற்றி தெரிந்து கொண்டதை அடிப்படை ஆக வைத்து எழுதியதாக சொல்கிறார்.

    “சாமி கொடுத்த குழந்தை” என்று நம் மக்கள் சொல்வதே இப்படி தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என்று தன் கதாபாத்திரங்கள் மூலம் நிறுவிகிறார். மேலும் திருவிழா வரும் அனைத்து பெண்களும் தேவிடியா என்றும் எழுதுகிறார். இது வருடந்தோறும் அக்கோவில் திருவிழா செல்லும் பெண்களை காயப்படுத்ததாதா? மேலும் பல கோவில்கள் சென்று தன் கணவனின் மூலம் காலம் தாழ்த்தி குழந்தை பெற்ற மனைவி மற்றும் கணவனை புண்படுத்தாதா?(குறிப்பாக திருச்செங்கோட்டில் வசிப்பவர்களுக்கு)

    அப்பொழுது கருத்து சுதந்திரம் என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்த அளிக்கப்பட்ட ஒரு உரிமமா?

    சரி இதற்கு அவர் வரலாற்று ஆதாரங்களை ஏதும் தருகிறாரா ? திருச்செங்கோடு என்பது அழிந்து போன ஒரு ஊர் அல்லவே, ஊகங்களாக ஒரு கருத்தை சொல்வதற்கு. வாய்மொழியாக கேட்ட தகவல்களை அல்லது வதந்திகளை ஒரு அருமையான கதையாக தரும் உரிமை உள்ளதே தவிர அதற்கு உண்மை சாயம் பூசி தம் மேதாவித்தனத்தை நிரூபிக்க பெருமாள் முருகனுக்கு உரிமை இல்லை.

    அடுத்து பெருமாள் முருகன் தான் ஊரின் பெயரை நீக்க சம்மதித்து விட்டாரே, அப்புறம் என்ன பிரச்சினை ?

    சர்ச்சை எழுந்தவுடன் பெருமாள் முருகன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது தான் எழுதியது அனைத்தும் கற்பனை என்று சொன்னாரா, இல்லை . இது தான் பல அறிஞர் பெருமக்களிடம் கேட்டும் மற்றும் கள ஆய்வு செய்தும், பல ஆவணங்கள் மூலமாகவும் கண்டறிந்த உண்மை என்றே பேசினார். மேலும் இந்நூல் ரத்தன் டாடா அறக்கட்டளை மூலம் உதவி பெற்று கள ஆய்வு செய்து எழுதியது என்று அவரே முன்னுரையில் சொல்கிறார். எனவே ஒரு தவறான அல்லது ஆதாரமற்ற ஒரு தகவலை தரும் நூலை தடை செய்ய சொல்வது நியாயமே.

    போராட்டம் வலுவடைந்த பின்பு பெருமாள் முருகன் மக்கள் முன் தான் சேகரித்த ஆவணங்களை கொடுத்து தன் கருத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தாரா? இல்லை. எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்தை மதவாத மற்றும் சாதிய சக்திகளும் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார் . பெருமாள் முருகனுக்கு ஆதரவு தந்த பெரும்பாலான மக்கள் இது ஒரு புனைவு என்ற விதத்திலயே ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் முன்னுரையிலயே “Its Based On True Story” என்று சொல்வதை போல நான் ஆய்வு செய்து காலத்தில் பின்னால் சென்று அம்மக்களுடன் பயணித்தேன் என்று சொல்கிறார். ஆக உங்கள் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆவணத்தை கொடுங்கள் அல்லது புத்தகத்தை திரும்பப்பெறுங்கள் என்பது தவறான வாதம் அல்லவே.

    அடுத்து ஒரு பெரும் குற்றசாட்டு, இது மதவாத மற்றும் சாதிய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட போரட்டம். போரட்டம் மதவாத கட்சிகளாலும் சாதிய கட்சிகளாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் நாம் கண்ணை மூடிக்கொண்டு பெருமாள் முருகனை ஆதரிக்க தேவயில்லை. போராட்ட வழி முறைகள் தவறு என்பதற்காக அவர்கள் தரப்பு நியாயத்தை நிராகரிக்க தேவை இல்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மிரட்டல்களோ வேறு வகையான அடக்குமுறையோ கையாளப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது அல்ல தண்டிக்கத்தக்கது.

    எனவே கருத்து சுதந்திரம், மதவாதம், சாதி, திராவிடம், பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி நீங்கள் அந்த மக்களின் உணர்வுகளையும் வலியையும் கொச்சைப்படுத்த முயலாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாதங்களை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

      போராட்டத்திற்குப் பின்னர் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் எழுத்தாளர். பிரச்சினை முடிந்துவிட்டதுபோல் தெரிந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் அது தொடரும்போல் தெரிகிறது.

      பெருமாள் முருகனை விழிப்புடன் செயல்படுமாறு எச்சரிக்கவே இந்தப் பதிவு.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ruth.

      நீக்கு
  10. புத்தகம் வெளிவந்த 4 ஆண்டுகளின் பின் , இப்பிரச்சனை பேசப்படுவது ஏன்? எனப் புரியவைப்பீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்செங்கோடு என்னும் நடுத்தர நகரத்தைச் சார்ந்த ஊர்கள் எல்லாம் கிராமங்கள்.
      இங்குள்ளவர்களுக்குத் தொழில் விவசாயம். மிகப் பெரும்பாலோர்க்கு புனைகதை வாசிப்பில் ஈடுபாடு கிடையாது.

      நகரத்தில் ரிக் மற்றும் லாரித் தொழில் பிரதானம். பணம் சம்பாதிப்பதில் உள்ள அக்கறை கதை படிப்பதில் இல்லை.

      வாசிக்கிற சிலரும் மேம்போக்காக நுனிப்புல் மேய்பவர்கள்தான்.

      வரிவரியாக வாசித்த யாரோ ஒருவர் சர்ச்சைக்குரிய இடங்கள் பற்றி நண்பர்களுக்குச் சொல்ல அது காட்டுத் தீயாக ஊரெங்கும் பரப்பப்பட்டது. இது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எழுத்தாளர் பெருமால் முருகனின் துரதிருஷ்டம் என்றும் சொல்லலாம்.

      நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரச்சினை உருவானதற்கு இது முக்கிய காரணம்.

      நன்றி யோகன் பாரிஸ்

      நீக்கு
  11. எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் அவசியம் வேண்டும்... அவன் உண்மையை மட்டும் எழுதும் பச்சத்தில்.

    சில சமயம் தூண்டுகோல்களே விளக்கை அணைத்திட முடியும் பரமசிவம் ஐயா.

    த.ம. 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...உண்மை.

      சற்றே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்தில் நுழைந்தேன். உங்களின் புதிய பதிவுகளை வாசிக்க இயலவில்லை. நாளை அவசியம் வாசிப்பேன்.

      நன்றி அருணா.

      நீக்கு
  12. ஐயா மிக சரியாக நடுநிலையுடன் எழுதி இருக்கிறீர்கள். ஒரு விலை மகளின் பிள்ளைகளாகவே இருந்தாலும் அதை சொல்லிக் காட்டினால் ஆமாம் உணமைதான் என்று மகிழ்ச்சி அடைய முடியாது.

    பதிலளிநீக்கு
  13. நான் நடுநிலையுடன் எழுதுவதாகக் குறிப்பிடுகிறீர்களே, அது போதும் எனக்கு.

    நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  14. குறிப்பிட்ட கோவில் ,சாதிப் பெயரை தவிர்த்து எழுதி இருந்தாலே போதும் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமாள் முருகன் சிறந்த தமிழறிஞர்; சிந்தனையாளர்; மிகச் சிறந்த படைப்புகளைத் தந்தவர்; நான் அறிந்த வகையில் நல்ல பண்பாளர். எவ்வாறோ தவறு நேர்ந்துவிட்டது.

      மனதில் வருத்தத்தைத் தேக்கி வைத்துக்கொண்டுதான் இப்பதிவை எழுதினேன்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  15. உண்மையிலேயே மனம் திறந்த மடல்.சிறப்பு.

    பதிலளிநீக்கு
  16. பெருமாள் முருகனை எச்சரிப்பதற்காக இப்பதிவு. என்ன எச்சரிப்பென்று எனக்கு புரியவில்லை. மேலும், எப்படி அந்த எச்சரிப்பு எழும் இப்போது?

    நாவல் கையெழத்துப்பிரதியாக அவர் உங்களிடம் கொடுத்திருந்தால் எச்சரிப்பு பலனைத் தந்திருக்கும். அல்லது, முதல் பதிப்பு வந்தவுடன் எச்சரித்திருந்தால், அடுத்த பதிப்புக்களையும் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பையும் தடுத்திருக்கலாம். ஆனால் காலம் கடந்தவுடன் எச்சரிக்கிறீர்கள்.

    இன்னொன்றையும் இரசித்தேன். உங்களுக்கென்று - அதாவது நாவலை எதிர்க்கும் உங்கள் ஜாதிக்காரகளுக்கென்று - ஒரு காரணம் இருக்கிறது. அதை விலாவரியாக விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் அக்காரணம் உங்களை மட்டுமே வருத்தும். படிப்போர் அனைவரும் உங்கள் ஜாதிக்காரர்கள் அல்ல. அவர்கள் எல்லாரும் திருச்செங்கோட்டிலோ அதன் சுற்றுக்கிராமங்களிலோ, அக்கோயில் திருவிழாவுக்குப் போகுபவர்களே இல்லை. பின் ஏன் அவர்கள் உங்கள் காரணத்துக்காக அந்த நாவலை எதிர்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? நீங்களென்ன இன்னொரு ஜாதியினர் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்களுக்காக போராடுவீர்களா?

    சால்மன் ருஷ்டி சாடானிக் வெர்சஸ் என்ற நாவலை எழுத அதை முசுலீம்கள் எதிர்த்தார்கள். அவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு. மற்றவர்கள் ஏன் அந்த நாவலைப் படிக்கக் கூடாது? அதைப்போல, உங்கள் பிரச்சினை உங்களுக்கு மட்டும்தான். ஆதரவு போராட்டக்காரர்களுக்கன்று.

    ஆக, பரமசிவம்! ஒருவனுக்கு விஷ‌ம்; அதே மற்றவனுக்கு பாயாசம். ஒரு கூட்டத்திற்கு அவன் தீவிரவாதி; அவன் கூட்டத்தாருக்கு அவர் சுதந்திரப்போராளி.

    அடுத்து! எச்சரிப்பு பற்றி>

    நாவல் ஆயிரக்கணக்கில் வெளியாக புழங்கிவிட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்போ அழகாகச்செய்யப்பட்டு உலகெங்கும் பரந்துள்ள பெங்குயின் நிறுவனத்தாரால் விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்கள் அனைவரிடமும் இப்போது அல்லது பின்போ படிக்கப்படும். அவர்கள் அனைவரும் உங்கள் ஜாதியுணர்வையும் உங்கள் மானவுணர்வையும் பற்றிக்கவலைபபட மாட்டார்கள்.

    ஆதரவு போராட்டக்காரர்கள் நிலைபாடும் உங்கள் நிலைபாடும் வெவ்வேறு. அவர்கள் நிலைபாட்டை நீங்கள் எதிர்க்க, அவர்கள் உங்கள் நிலைபாட்டை ஏற்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். ஏதாவது ஒரு நிலைப்பாடே இங்கு சரியென்றாகும்போது எப்படி ஏற்பார்கள்?

    போராட்டம் பெருமாள் முருகன் கையை மீறி ஒன்று. உங்களால் அவரை எச்சரித்து என்ன பயன்?

    ஒரே வழி> நீதிமன்றத்தை அணுகி நாவலுக்கு நிரந்தர தடை கோரலாம். வென்டி டோனிகரின் நூலை அழித்ததைப்போல இந் நாவலையும் அழிக்க வேண்டுமெனலாம். நீதிமன்றம் நேற்று சொன்னதைப்பார்த்தால், உங்கள் வழக்கு கண்டிப்பாக வெற்றி பெறாது. அப்படியே பெற்றாலும், டிஜிட்டல் எடிஷனை தற்போது எல்லாரும் தரவிறக்கம் செய்து படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    டூ லேட், டியர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ***அதன் ஆங்கில மொழிபெயர்ப்போ அழகாகச்செய்யப்பட்டு உலகெங்கும் பரந்துள்ள பெங்குயின் நிறுவனத்தாரால் விற்பனை செய்யப்படுகிறது.***

      Yeah, Right!

      This novel will break the sales record of Da Vinci Code by Dan Brown!

      And P Murugan will be come a millionaire soon!

      Is that correct? ROTFL

      நீக்கு
  17. மலரன்பன்,

    நேற்று பிற்பகலிலிருந்து இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் உடனுக்குடன் பதில் தர இயலவில்லை.

    மனம் திறந்த விரிவானதொரு கருத்துரையை வழங்கியிருக்கிறீர்கள்.

    பதிவின் இறுதியில், ’எழுத்தாளனின் உரிமை பறிக்கப்படுவதாகச் சொல்லிக்கொண்டு உங்களைக் கொம்பு சீவிவிடும் ஆரவாரக் கும்பலின் பின்னால் நீங்கள் சென்றால்......

    அது உங்களுக்கு நன்மையாக அமையலாம்; தீமையாகவும் முடியலாம். மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படுங்கள்’ என்று நான் குறிப்பிட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.

    ‘தீமையும் விளையலாம்’ என்று பெருமாள் முருகனை எச்சரிக்கை செய்யவே இந்தப் பதிவு.

    நூலின் விற்பனை பற்றியெல்லாம் பேசுவது என் நோக்கமல்ல.

    பதிவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் எதை எதையோ எழுதிச் சிரமப்பட்டிருக்கிறீர்கள்.

    //படிப்போர் அனைவரும் உங்கள் ஜாதிக்காரர்கள் அல்ல. அவர்கள் எல்லாரும் திருச்செங்கோட்டிலோ அதன் சுற்றுக்கிராமங்களிலோ, அக்கோயில் திருவிழாவுக்குப் போகுபவர்களே இல்லை. பின் ஏன் அவர்கள் உங்கள் காரணத்துக்காக அந்த நாவலை எதிர்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?//

    நான் இப்படி நினைத்ததற்கு என்ன ஆதாரம்? நீங்களாகக் கற்பனை செய்திருக்கிறீர்கள்!

    ’மற்ற ஜாதிக்காகப் போராடுவீர்களா?’ என்று கேட்கிறீர்கள். ’உங்கள் ஜாதி’ என்று சொல்லி என்னை அடையாளம் காட்டிவிட்டீர்கள். அப்படிப் போராடி அனைத்து ஜாதியாரும் போற்றக்கூடிய ஒப்பற்ற தலைவராகும் எண்ணமெல்லாம் எனக்கில்லை. என் வாரிசுகளை நல்லபடியாக வாழ வைத்தாலே போதும்.

    //உங்கள் வழக்கு கண்டிப்பாக வெற்றி பெறாது//

    நான் முருகனுக்காகவோ அவருக்கு எதிராகவோ போராடவும் இல்லை; வழக்குத் தொடுக்கவும் இல்லை.

    இனியேனும், ஒரு பதிவுக்குக் கருத்துச் சொல்லும் போது, பதிவு முழுவதையும் படித்துப் புரிந்துகொண்டு அதைச் செய்யுங்கள்.

    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் ஜாதிக்காக எழுதவில்லை என்று அறிந்து மகிழ்ச்சி;

    பதிவைவொட்டி எழுதவில்லையென்கிறீர்கள்.

    ஒன்று அந்நாவலை எதிர்க்க வேண்டும். நாவலாசிரையும் திட்ட வேண்டும்.

    இல்லாவிட்டால் அவரை ஆத‌ரிக்க வேண்டும்.

    இரண்டுமில்லாமல், அவர் எழுதியவை அவ்வூர் மக்களால் தவறாக எடுக்கப்படும் என்று மட்டுமே எச்சரிக்கிறீர்கள்.

    அதாவது, அவர் எழுதியவை ஓகே. ஆனால் தவறாக எடுக்கப்படலாம். பிறகு, இறுதியில் எழுத்தாளனின் உரிமை பற்றிப்பேசுவோர் ஆரவாரக்கும்பல் என்று சொல்லி எச்சிரிக்கிறீர்கள்.

    அவர் எழுதியவை சரி; ஆனால் தவறாக எடுக்கப்படலாமென்பதும் அந்த ஆரவாரக்கும்பல் சொல்வதுதான். அதற்காக எழுதுவதை நிறுத்தாதீர்கள் என்று நீங்கள் சொல்வதையும் அந்த கும்பலும் சொல்கிறது.

    மன்னிக்கவும். உங்கள் எழுத்தில் தெளிவில்லை.

    பதிலளிநீக்கு
  19. பெருமாள் முருகன் மிகச் சிறந்த எழுத்தாளர்; பண்பாளர்; என்னுடைய நெருங்கிய நண்பரும்கூட.

    அவருடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கிய நிலையில் கருத்துப் பதிவு செய்திருக்கிறேன். பதிவில் தெளிவில்லையென்று நீங்கள் கருதுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். நன்றி.

    நான் இன்று[24.01.2015] வெளியிட்டுள்ள சிறுகதை பற்றியும் உங்கள் கருத்தைச்[விரும்பினால்] சொல்லலாமே.

    பதிலளிநீக்கு