நான் சாருவைச் சாடி எழுதியிருக்கிறேனே தவிர, பாராட்டிப் பதிவிட்டதில்லை. இன்று அதற்கான வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
.....‘இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை.......
.....ஒரு ஃபிரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃபிரெஞ்சு மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும்.....
.....இப்படித் தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம் என்பதுதான். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேசவேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. “நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பிக்கச் சொல்லி உத்தரவு போடவில்லை” என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!’.....
‘தி இந்து[25.05.2016]’வில், ‘சென்ற நூற்றாண்டின் இலக்கியம்’ என்னும் தலைப்பிலான ‘சாரு நிவேதிதா’வின் ‘பேட்டி’யிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பு இது.
சாருவுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டும் நன்றியும்.
===============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக