வியாழன், 7 ஜூலை, 2016

ஒரு இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் பெண்!

இந்து மதத்தவரான ஒரு முதியவருக்கு, அவருடைய மகன்[மதம் மாறியவர்] செய்யத் தவறிய  கடமையை ஒரு முஸ்லிம்  பெண் செய்திருக்கிறார். இது மனிதாபிமானத்தின் உச்சம்!
‘யாகூ பீவி’ ஒரு முஸ்லிம் பெண். தெலங்கானா மாநிலத்தில் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். 

05.07.2016 அன்று, இல்லத்தில் தங்கியிருந்த ஒரு முதியவர்,  தான் சாகும் தறுவாயிலிருப்பதை உணர்ந்து,  இந்துக்களின் பழக்க வழக்கங்களின்படி தன் சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவர் இறந்துபட்ட நிலையில், முதியவரின் மகன்[மதம் மாறியவர்] இந்து முறைப்படி சடங்கு செய்ய இயலாது என்று மறுத்துவிடுகிறார்.

முஸ்லிம் பெண்ணான யாகூ பீவி, முதியோர் இல்லத்திலிருந்து இடுகாடுவரை முதியவரின் சடலத்தின் முன்னால் தீச்சட்டி சுமந்து சென்றார்; இந்துக்களின் வழக்கப்படியே ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தார். 

யாகூ பீவியின் மனித நேயத்தை நாம் போற்றப் புகுந்தால் அது வார்த்தைகளில் அடங்காது.

“முதியவர் இரண்டு ஆண்டுகளாக என் பராமரிப்பில் இருந்து வந்தார். என் தந்தையாகவே அவரைப் பாவித்து வந்தேன். இதன் காரணமாகவே மதத்தை மறந்து, அவருடைய மகளாக இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தேன். இது என் கடமை மட்டுமல்ல; மனிதாபிமானமும்கூட” என்று நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார் யாகூ பீவி.
===============================================================================
நன்றி: ‘தி இந்து[07.07.2016]



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக