எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 15 ஜனவரி, 2019

அ...ஆ...இ...ஈ...தமிழனாய் வாழ்த்துகிறேன்!

இன்று தமிழர் திருநாள்.

நல்லதொரு கவிதையில் வாழ்த்துச் சொல்ல விழைந்தேன். கற்பனை கைகொடுக்கவில்லை!

தமிழரைப் போற்றும் தரமானதொரு கவிதையைக் கூகுளில் தேடினேன். வாசித்தவற்றில் ஒன்று உள்மனதைச் சுட்டது. அது.....

#யாவரும் கேளீர்.....
சூடு பட்டால்  ''அ..ஆ... உ… ஊ…''
அதட்டும் போது  ''எ… ஏ…''
மனதில் மகிழ்ச்சி நிறைந்தால் மட்டும் 'ஐ…'
வியப்பில் மூழ்கினால் ''ஒ… ஓ…''
அவ்வையாரை நினைவுகூர்ந்தால் ''ஔ…''
விக்கல் எழும்போதெல்லாம் ''ஃ…''
என்றிவ்வாறு
உயிர் எழுத்துகளை மட்டும் உச்சரித்து
மற்ற நேரம் தாய்மொழியைப் புறக்கணிக்கும்
தமிழனிடம் உறைக்கும்படி சொல்வீர்.....
''உன் மொழி
தமிழ் மொழி'' என்று
                     ………..ஒரு தமிழன்#
[நன்றி: https://kavithaicorner.wordpress.com/?s=

தமிழைப் போற்றுவோம்.

தமிழராய் வாழ்வோம்; நல்ல மனிதராக வாழ்வோம்.

நமக்குச் சாதி வேண்டாம்; சமயம் வேண்டாம்; மதமும் வேண்டாம். மனிதநேயம் போதும்.

அனைவருக்கும் என் மனம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்து க்கான பட முடிவு
Indiblogger முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.