ஞாயிறு, 13 ஜனவரி, 2019

மாநிலங்களவையில் கனிமொழியின் 'சாதனை' மொழி!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா குறித்துக் கடந்த புதன் அன்று மாநிலங்களவையில் விவாதம் நடந்தது.

'இந்த மசோதா இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கே முரணானது' என்பதற்கான காரணங்களை விளக்கிக் கனிமொழி பேசினார்.
கனிமொழி க்கான பட முடிவு
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, துணை சபாநாயகர் இடைமறித்து, ''உங்கள் நேரம் முடிந்துவிட்டது'' என்று இந்தியில் அறிவித்தார். இந்தி மொழியிலான அவரின் அறிவிப்பை விரும்பாத கனிமொழி தன் பேச்சை நிறுத்தாமலே, ''எனக்குப் புரியக்கூடிய மொழியில் பேச முடியுமா?'' என்றார்.

துணை சபாநாயகரும், அதை ஆங்கிலத்தில் அறிவித்தார். இது செய்தி['இந்து தமிழ்' 13.12.2019].

கனிமொழியின் துணிச்சலான செயல் நம்மை மிகவும் மகிழ்விக்கிறது.

மனப்பூர்வமாய் அவரைப் பாராட்டுவோம். இனியும் அவரின் பணி சிறந்திட வாழ்த்துவோம்.
------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் வெளியான என்னுடைய 11ஆவது நூல்[முன்னதாக 10 நூல்கள்].....



------------------------------------------------------------------------------------------------------------------