“இல்லம்மா.”
“பொண்ணுப் பார்க்கப் போகணும். லீவு போடுடான்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேனேடா?” -முகம் சுண்டினார் வேலம்மா.
“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு நானும்தான் சொல்லிட்டிருக்கேன். நீ அதைக் காதில் போட்டுக்க மாட்டேங்குறே.”
“வேலை கிடைச்சதும் பண்ணிக்கிறேன்னு சொன்னே. வேலைக்குப் போயி வருசம் ஒன்னாச்சி. மறந்து போச்சா?”
“இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்.”
அதிர்ச்சியடைந்த வேலம்மா, “காரணத்தைச் சொல்லுடா” என்றார்.
''நான் பொடியனா இருக்கும்போதே அப்பா இறந்துட்டார். இருபது வருசம் போல கூலி நாழி செஞ்சி என்னை வளர்த்து ஆளாக்கினே; படிக்க வைச்சே. அந்த இருபது வருசமும் உன் ஒரே மகனான எனக்கே எனக்காக மட்டுமே நீ வாழ்ந்தே. இரண்டே இரண்டு வருசமாவது இன்னொருத்திக்குப் பங்கு கொடுக்காம உனக்கே உனக்காக மட்டுமே நான் வாழ ஆசைப்படுறேம்மா. இனியும் கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை வற்புறுத்தாதே.” -உறுதிபடச் சொன்னான் குப்புசாமி.
கண் கலங்கினார் வேலம்மா.
------------------------------------------------------------------------------------------------------------------
கிண்டிலில் வெளியான என்னுடைய 12 ஆவது நூல்.....