#சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்குத் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப் பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதில்லை. சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்து வருகின்றனர். எனவே, அனைத்துக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று முதல் சாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோல், அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்னை செய்யப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சித்திரைத் திருநாளின் முதல்நாளான நேற்றுமுதல் வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டவுடன் முதல் அர்ச்சனை தமிழில் மேற்கொள்ளப்படும்[மகிழ்ச்சி]. பிற நேரங்களில் பக்தர்கள் கேட்டு கொண்டால் தமிழில் அர்ச்சனை செய்வோம்’’ என்றார்#
//அனைத்து கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்//
யாரந்தப் பல்வேறு தரப்பினர்? ''தமிழில் அர்ச்சனை செய்'' என்று சொல்ல வேண்டியதுதானே? 'உம்' எதற்கு?
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைப்படிதானே தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. அப்புறம் என்ன 'கேட்டுக்கொண்டால்'?!
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி 'டால்...' போட்டுப் போட்டு தமிழுணர்வு உள்ளவர்களை நோகடிக்கப் போகிறார்கள்?
நமக்கொரு சந்தேகம்.....
''எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்'' என்று ஊருக்கு இரண்டொரு கிறுக்கர்கள் சொல்லிக்கொண்டு அலைகிறார்களே, அவர்களின் வாக்கை[ஓட்டு]ப் பெறுவதற்காகத்தான் இந்த அறிவிப்பா?!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக