பக்கங்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

'பர...பர...' செய்தி போட்டுக் கலவரத்தைத் தூண்டுகிறதா 'காலைக்கதிர்' நாளிதழ்!?

விற்பனையில் பின்தங்கியிருந்தாலும், வாசகருக்குச் சூடாகவும் சுவையாகவும் செய்தி வழங்குவதில் காலைக்கதிர் நாளிதழ் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சில நேரங்களில், மக்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் வகையில் இட்டுக்கட்டிய பொய்ச் செய்திகளைப் பரப்புகிறதோ என்றொரு சந்தேகம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை. நேற்றுறு[01.04.2019] அதில் இடம்பெற்ற ஒரு  செய்தி அதற்கு எடுத்துக்காட்டாகும்.*

கர்னாடக முன்னாள் முதல்வரான சித்தராமையா ஒரு நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முயன்றபோது, ''நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டவர்களைக் கண்டாலே எனக்குப் பயமாக இருக்கிறது; அவர்களுடன் செல்ஃபி எடுக்கவும் தயக்கமாக இருக்கிறது'' என்று அவர் பேசியதாகவும் குறிப்பிடுகிறது அந்தச் செய்தி.

அதற்கு ஆதாரமாக, சிலர் சித்தராமையாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற காட்சியைக் அது வெளியிட்டிருக்க வேண்டும். மாறாக, நெற்றியில் குங்குமத்துடன் காட்சியளிக்கும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியின்[அவரை என்னால் அடையாளம் காண இயலவில்லை] படத்தை வெளியிட்டு, சித்தராமையாவுக்கு எதிராக அவரைச் செயல்படத் தூண்டியிருக்கிறது. 

சித்தராமையாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றாலும் அதைக் கண்டிப்பதற்கான முன்னுரிமை பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட குங்குமப் பொட்டுக்காரர்கள். 

கண்டித்த ஒரு சிலரின் பெயர்களைக்கூட வெளியிடவில்லை இந்த நாளிதழ்.

கீழ்க்காணும் நகல் பிரதியில் சிவப்புக் கோடிட்ட பத்திகளைக் கவனித்துப் படித்தால். நாளிதழ்களுக்குரிய நடுநிலைப் போக்கைக் காலைக்கதிர் கடைபிடிக்கிறதா, பத்திரிகை தர்மத்தைப் போற்றுகிறதா எனும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

'[சித்தராமையாவுக்கு] சீண்டுவதே வேலையாப் போச்சு'  -இவ்வாறு உட்தலைப்புக் கொடுத்திருப்பது, 'நடுநிலை வார இதழ்' என்று சொல்லிக்கொள்ளும் காலைக்கதிர்தான். 

இதற்கு முன்பு யாரையெல்லாம் அவர் சீண்டினார் என்பற்கான பட்டியலை அது தந்ததா என்றால்...''ஊஹூம்.''

'கர்னாடக மக்கள் உண்மையில் குமுறிக்கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் குமுறி எழுந்து சித்தராமையாவுக்கும் அவர் சார்ந்த பகுத்தறிவு இயக்கங்களுக்கும் அல்லது கட்சிக்கும் எதிராகப் போராட வேண்டும் என்று காலைக்கதிர் ஆசைப்படுவது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

இவ்வாறெல்லாம் ஆசைப்படுவது இதன் வளர்ச்சிக்குக் கொஞ்சமும் பயன்படாது என்பதை உறுதிபடச் சொல்லுகிறோம்.
=================================================
*காலைக்கதிர் என்கிற காமாலைக் கதிருக்கு கம்யூனிஸ்ட்கள் தான் இலக்கு போல! தினசரி எதாவது அவதூறுகளை பரப்பிக் கொண்டே இருந்தால்தான், அதற்கு தூக்கம் வரும் போல! இன்று 25.6.15 ஒரு கார்டூன்..!


4 கருத்துகள்:

  1. ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மக்களை மடையர்களாக்குவதே குறிக்கோள் என்று தீர்மானித்து இருக்கின்றார்கள் போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது விசயத்தில் இந்தக் காலைக்கதிர்தான் நம்பர் ஒன்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. இன்னும் கொஞ்சம் நாளைக்கு இந்த செய்திகள், முகநூல் தகவல்கள், வாட்ஸப் நிலைத் தகவல்கள் என அனைத்தும் பார்க்காமல் இருக்க வேண்டும்! நான் அப்படித்தான் இருக்கிறேன். பொய்யும் புரட்டும் எங்கே பார்த்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே பார்த்தாலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது.
      நன்றி வெங்கட்.

      நீக்கு