''அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்பே தினசரி லைட்டா சரக்கேத்திட்டுத்தான் வெளியே வர்றார். இது இல்லேன்னா, பெரும்பாலான நம் அரசியல் தலைவர்களுக்குக் கையும் ஓடாது; காலும் ஓடாது. அதனாலதான் பல பேரு, பிரதமரை முதல்வருங்கிறாய்ங்க. முதல்வரைக் கவர்னருங்கராய்ங்க! ஓட்டுக் கேட்கறதுக்கான நிதானம்கூட இல்ல.....
.....குடிக்கிறதுதான் குடிக்கிறோம், நல்ல சரக்கா குடிப்போமே. குடிச்சிக் குடிச்சி ஒடம்பு நல்லா இருந்தா குடும்பம் நல்லா இருக்கும். குடும்பம் நல்லா இருந்தா நாடு நல்லா இருக்கும்'' என்று 'காமதேனு' இதழுக்குக்[31.03.2019]கான பேட்டியில் சொன்ன திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.எம்.சேக் தாவூத் ரொம்பவே விவரமான மனிதர்.
''டாஸ்மாக் சரக்கு மகா மட்டமான சரக்கு. கண்டதையெல்லாம் அதில் கலக்குறானுக. அதைக் குடிச்சிட்டுக் குடல் வெந்துபோய் சித்திரவதைப்பட்டுச் சாகரானுக நம்ம ஆளுங்க. அதனால, நான் ஜெயிச்சி எம்.பி. ஆனா, என் தொகுதி ஆம்பிளைங்க அத்தனை பேருக்கும் தரமான பண்டிச்சேரி ஒரிஜினர் சரக்கை மாசம் பத்து லிட்டர் வீதம் தருவேன். குடும்பத் தலைவிகள் வாயை அடைக்க மாசம் ரூ25000/= தருவேன்'' என்பவற்றையும் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்திருக்கிறார் சேக் தாவூத்.
அதோடுகூட, மதுவிலக்கை எதிர்த்து டெல்லிக்குப் போய்ப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் முழங்கியிருக்கிறார்.
தேர்தல் செலவுக்காகக் கந்துவட்டிக்கு 50000 ஆயிரம் ரூபாயும் வங்கியில் 50000ரூபாயும் கடன் வாங்கி வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
தாவூத்தை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அவருக்கே என் ஓட்டு.
இப்போதெல்லாம் திருட்டு ஓட்டுப் போட முடியுமா?
முடியும்னா திருப்பூர் சென்று தாவூத்துக்குக் கள்ள ஓட்டுப் போட முடிவு செய்திருக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி பகிரங்கமாக கள்ள ஓட்டுப்போடுவேன் என்று அறிக்கை விட்டால் ?
பதிலளிநீக்குமிலிட்டரி போலீஸோடு உங்களை கைது செய்துருவாங்களே...
உங்களைப் போன்ற பதிவுலக நண்பர்கள் வேடிக்கை பார்ப்பார்களா என்ன?!
நீக்குநன்றி...நன்றி நண்பா.
அறிவுடைநம்பிகள் வாழ்ந்த மண்ணில் அறிவிலிநம்பிகளா? தமிழன் உருப்படமாட்டான்!
பதிலளிநீக்குகாலத்தின் கோலம்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
அரசியல்.... எதையும் செய்யலாம்.
பதிலளிநீக்குஎதையும் தாங்கும் சக்தியுள்ளவர்கள் தாக்குப்பிடிக்கலாம்.
நீக்குநன்றி...நன்றி வெங்கட் நாகராஜ்.