பக்கங்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2019

பச்சோந்திகளா நம் மக்கள்?!

பொது இடங்களில் எச்சில் உமிழ்வதைத் தடுக்கச் சீனாவில் தண்டனை முறை வகுத்திருக்கிறார்கள் என்றதும், ''இந்தியாவிலும் அப்படிச் செய்தாலென்ன?'' என்று சிலர் கேட்கிறார்கள்.

சிங்கப்பூரில் தெருவில் காகிதம் எறிந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டால், ''இங்கும் அப்படிச் செய்தாலென்ன?'' என்கிறார்கள்.

அரேபியாவில் குற்றம் புரிந்தவர்களுக்குக் கை கால் வாங்கப்படுகிறது என்று கேள்விப்படும்போது, ''நம் நாட்டிலும் அப்படிச் செய்தால்தான் சரிப்பட்டுவரும்'' என்று நம்மவர்கள் சொல்கிறார்கள்.

அப்படியெல்லாம் செய்வது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால்.....

சட்டம் கொண்டுவர வேண்டுமென்று சொல்கிற, ஆரவாரம் செய்கிற அதே மக்கள்தான்.....

அவர்கள் சொல்கிறபடியெல்லாம் சட்டம் இயற்றிய பின்னர், 

''எச்சில் துப்பக்கூடாதாமே, இதென்ன அக்கிரமம்!''

''காகிதம் போட்டால் அதென்ன அவ்வளவு பெரிய குற்றமா?''

''இவ்வளவு சிறிய தப்புக்கு அவ்வளவு பெரிய தண்டனையா?''

''இது ஜனநாயகம் அல்ல. கொடுங்கோன்மை. எதேச்சிகாரம்!''

என்றெல்லாம் முழக்கமிட்டுத் தெருத் தெருவாய் ஊர்வலம் சென்று போராடுகிறார்கள்.

இவர்களை நம்பி யாரால் நல்லாட்சி தர இயலும்?!
==================================================================================
20.05.1982 'குமுதம்' வார இதழில் வெளியான தலையங்கம்.

6 கருத்துகள்:

  1. இதுவும் உண்மைதான் நண்பரே...
    அரசியல்வாதி என்பவன் வானத்திலிருந்து குதித்து வரவில்லை நம்மிலிருந்து போன பச்சோந்தியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்திசாலிப் பச்சோந்தி என்று சொல்லலாமா?!

      நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு