பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 4 மே, 2019

'போதை'க்காக நடந்த போர்!!!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, இங்கிருந்து 'ஓபியம்' என்னும் போதைப் பொருள் சீனாவுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டதாம்.

அப்போது சீனாவை ஆண்ட 'கிங்' அரசு அதைத் தடை செய்தது. 

அதன் விளைவாக சீனாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போர்தான் 'ஓவியம் போர்' எனப்பட்டது.

நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் சீனா தோற்றது. சீனாவின் மீது ஆதிக்கம் செலுத்தலாயிற்று இங்கிலாந்து. விளைவு.....

தன்னுடைய ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, இங்கிலாந்தின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்த கிங் அரசு அது விதித்த பல நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. அவற்றில் ஒன்று.....

சீனாவுக்குச் சொந்தமான 'ஹாங்காங்' நகரை நூறு ஆண்டுகளுக்கு இங்கிலாந்துக்குக் குத்தகைக்கு விடுவது.

ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில், இங்கிலாந்து சீனாவிடமே அந்நகரை அண்மைக்காலத்தில் ஒப்படைத்த நிகழ்வு அறியத்தக்கதாகும்.




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: New Horizon Media Pvt.Ltd.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக