‘‘எனக்கு இந்தியுடன் 45 வருடப் பழக்கம் உண்டு. பல நூல்களை இந்தியில் மொழிபெயர்த்துள்ளேன். நான் கூறுபவை வெறும் பேச்சல்ல’’ என்னும் உறுதிமொழியுடன் மீராவின் ‘அன்னம் விடு தூது’[சனவரி 1985] இதழில் இந்தி மொழி குறித்த தம் கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்தார் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு அவர்கள்.
இன்றைய ‘தமிழ் இந்து’[14.07.2019] நாளிதழ் அப்பதிவை எடுத்தாண்டிருக்கிறது. அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளைக் கீழே வாசிக்கலாம்.
‘...பெரும்பான்மை மக்கள் பேசுவது இந்தி என்பது உ.பி.யை மட்டுமே வைத்துக்கொண்டு பேசும் பழங்கதை - ஒரு ‘மித்’. வட நாட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மொழி வேறுபடுகிறது. அவற்றுக்கிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
புத்தக இந்திக்கும் பேச்சுமொழி இந்திக்கும் இடைவெளி நிறைய. கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திக்காகச் செலவிடும் மத்திய அரசு, அம்மொழி வளர்ந்துகொண்டிருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய்.
பல மாநிலங்களுக்கு இணைப்பு மொழியாக இந்தி உள்ளது என்று பிரச்சாரம் செய்வதும் பொய்யே.
அரசாங்க மொழியாகவும், இந்தியாவின் ஆட்சிமொழியாகவும் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை அமரவைக்க முயல்கிறார்கள் இந்தி வெறியர்கள். இது பேராசைதானே தவிர இம்முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. மக்களிடையே ஒற்றுமை குறைய இது வழி வகுக்கும் என்பது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக