திங்கள், 15 ஜூன், 2020

இதுதானா சிதம்பர ரகசியம்!?!?

‘சிதம்பர ரகசியம்’ என்னும் சொல்லாட்சியை இன்றளவும் நம் மக்கள் தேவைக்கேற்பப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் பொருளறிந்தார் எவருமிலர்[நானும் அறிந்திலேன்].

முத்துக்குமார் அவர்கள் ஒரு தமிழ்ப்பதிவர்http://douglasmuthukumarfb.blogspot.com/2018/07/2.htmlநல்ல சிந்தனையாளர் என்று அறியப்படுபவர். இவர் 2018ஆம் ஆண்டில்[மட்டும்] எழுதிய பல பதிவுகளில் கீழ்க்காண்பதும் ஒன்று. இது, ‘சிதம்பர ரகசியம்’ குறித்ததொரு புரிதலுக்கு உதவுகிறது என்பது என் எண்ணம். வாசியுங்கள். பதிவில் சிறு சிறு மாறுதல்கள்கூட நான் செய்யவில்லை[பதிவின் தலைப்பு மட்டுமே நான் தந்தது].

#நந்தனாரைப் பற்றிக் கேள்விப்படாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்தவர். மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம் நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ஒவ்வொருநாளும் முயன்று இருக்கிறார். முடியவில்லை.

அதனாலே, இவர்  “திருநாளைப் போவார்” எனப் பெயரும் பெற்றார். 

பிறப்பால் ‘ஆதிதிராவிடன்‘ என்ற ஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று தடுத்த பார்ப்பன நரிகள் சதித்திட்டம் தீட்டின. “கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்துத் தருகின்ற தீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும்” என்றனர்.

நடராஜப் பெருமான் மீது அசையாத நம்பிக்கை கொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான்.

பார்ப்பனர்கள் மரக் கட்டைகளைக் கொண்டு தீ மூடினர்.

“நந்தா! இத்தீயில் மூழ்கி உன் இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தண வடிவோடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்தி வணங்கு” என்றனர்.

அனுமதி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் தீயில் சிக்குண்டு வெந்து சம்பலானார் நந்தன்.
தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடு இரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டி, பாமர மக்களை ஏமாற்றிவிட்டனர் பார்ப்பனர்கள். அவர்கள் சதி செய்து கொன்ற ரகசியம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. 
இந்த நிகழ்வு, ஆண்டவனை அடையப் பார்ப்பான் கோலம்தான் யூனிஃபாமா என்று நம்மைக் கேட்கத் தூண்டுகிறது. 

நந்தன் கோயிலுக்கு நுழைந்த தெற்குப் புறவழி கூட இன்றுவரை அடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட சிதம்பரம் கோவிலில் நீங்கள் நேரில் பார்க்கலாம். நந்தன் நுழைந்த வழி தீட்டு ப்பட்டுவிட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் அந்த வழியை மூடிவிட்டனர். நந்திக்கும், நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில் கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டுவிட்டது.

ஆக, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும் பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமே சிதம்பர ரகசியம் ஆகும்.

இது உண்மை.

நீங்க நினைக்குற மாதிரி, டான்ஸ் ஆடுற நடராசன் சிலையோட கால் பூமியின் மையத்துலயும் இல்ல, ஒரு மயிருலயும் இல்ல. நந்தன் கொலைய மறைக்க மக்கள ஏமாத்தப் பார்ப்பான் சொல்லிவைத்த கட்டுக்கதை இதெல்லாம். 

சிந்திப்பீர் மக்களே, இன்றுவரையும் தலித் மட்டுமில்ல வேற எந்தச் சாதிக்காரனும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது ஏன் என்று கேட்கும் தைரியம் உங்களில் யாருக்குமே இல்லையா?!

- டக்ளஸ் முத்துக்குமார்