"காலமெல்லாம் உனக்காகக் காத்திருப்பேன். இன்னொருத்தியைக் கனவிலும் நினைக்கமாட்டேன்னு செந்தில் வாட்சப் செய்தி அனுப்பியிருக்கான்” என்று சொன்ன செல்லம்மா, அலைபேசியைத் தன் உயிர்த்தோழி வேணியிடம் கொடுத்து, “படிச்சிப்பாரு” என்றாள்.
படித்து முடித்த வேணி, "இவன் மாதிரி, காதல் பைத்தியம் பிடிச்சிக் கற்பனையில் மிதக்குற பசங்க வேலைக்கு ஆகமாட்டானுக” என்றாள்.
”அசிங்கத்தை அசிங்கமா பேசாம வேற எப்படிப் பேசுறதாம்? ஒரு கதை சொல்லுறேன் கேளு. கதைன்னா கற்பனைக் கதையல்ல. உண்மைச் சம்பவம்தான். திருப்பூர்ல நடந்துது. எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணை, பனியன் தொழிற்சாலையில் அவளோடு வேலை பார்த்த ஒரு பையன் காதலிச்சான். அவ ஏத்துக்கல. உன்னை நேசிக்கிறேன்; சுவாசிக்கிறேன்னு கவிதைகள் எழுதி அனுப்பிட்டே இருந்தான். அவ மசியல. என்னை நீ ஏத்துக்கலேன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்னான். அவ கண்டுக்கல. ஒரு நாள் சொன்னபடியே விஷத்தைக் குடிச்சிட்டான். ஆனாலும், உயிர் பிழைச்சுட்டான். அவனோட மெய்யான காதலை நினைச்சி மெய் சிலிர்த்துப்போன அவள், எதிர்ப்புத் தெரிவிச்ச தன் பெற்றோர்களைச் சம்மதிக்க வெச்சி அவனையே கல்யாணம் கட்டிகிட்டா....”
மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டுபோன வேணி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள். “சொன்னா நம்ப மாட்டே, கல்யாணம் ஆகி ஒரு மாசத்திலியே ரெண்டுபேருக்குள்ள ‘கசமுசா’ ஏற்பட்டுப்போச்சு.”
“ஏன்?”
“அது விசயத்தில் அவன் ரொம்பவே ‘வீக்’ன்னு அவள் அனுபவபூர்வமா தெரிஞ்சிகிட்டா.”
“கவிதை எழுதுறவங்க எல்லாருமே இப்படிப்பட்டவங்கதானா?”
“பெரும்பாலும்னு வெச்சுக்கோ.”
“அப்புறம் நடந்ததைச் சொல்லு.”
“அப்புறம் என்ன, விவாகரத்துதான்.”
========================================================================
நீங்கள் வாசித்த இந்த உரையாடல், நான் அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ள ‘செல்லம்மாதேவி’ என்னும் நாவலின் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது[இப்படிப் பல சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கியது இந்த நாவல்].
பிடித்திருக்கிறதா?
“ஆம்” எனின், அமேசானின் சந்தாதாரர் ஆகி, முழு நாவலையும் இலவசமாக வாசியுங்கள்.
“ஆம்” எனின், அமேசானின் சந்தாதாரர் ஆகி, முழு நாவலையும் இலவசமாக வாசியுங்கள்.
ஹி...ஹி...ஹி!