‘உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு, 'அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில், அறக்கட்டளையை, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் அமைத்தது. கடந்த 18ஆம் தேதி நடந்த அறக்கட்டளை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை ஆக.5ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வருமாறு, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது[24.07.2020 தினமலர்.காம் செய்தி].’
மேற்கண்ட அழைப்பு வெளியான அதே வேளையில், பா.ஜ.க. கட்சித் தலைவர்களில் ஒருவரான, ராமேஸ்வர் சர்மா[உ.பி], கீழ்க்காணும் வகையிலான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் துவங்கியவுடன், உலகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றின் அழிவு துவங்கும்.’
ஒட்டுமொத்த உலக மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மிக நல்ல செய்தி இது?
சில மாதங்கள் முன்பே ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருந்தால், அப்போதே கொரோனா அழிய ஆரம்பித்திருக்கும். ராமேஸ்வர் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டார் போலும்.
ராமரின் கருணையால் அழியத் தொடங்குகிற கொரோனா, முழுவதுமாய் எப்போது அழியும் என்றும் சர்மா அவர்கள் சொல்லிருக்கலாம். இனியேனும் அறிவிப்பார் என்று நம்புகிறார்கள் மக்கள்.
கட்டுமானப் பணிக்காகக் காத்திராமல், முன்கூட்டியே ராமபிரானை நேர்ந்துகொண்டிருந்தால், அப்போதே அவர் கொரோனாவை விரட்டியடித்திருக்கவும்கூடும்.
கொரோனாவை அழிக்கும்போது, அவ்வப்போது மனிதர்களை மறைந்திருந்து தாக்கிக் கொல்லும் நச்சுக் கிருமிகளையும் அழித்துவிடும்படி ராமபிரானிடம் அவர் வேண்டிக்கொள்வார் என்பதும் மக்களின் மிக அழுத்தமான நம்பிக்கை.
நம்பிக்கை பலிக்குமா?
நல்லதே நடக்கட்டும்.
======================================================================