அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 24 ஜூலை, 2020

எது ஒழுக்கம்?...‘பெரியார்’ விளக்கம்!

மற்றவர்கள் நமக்கு எதைச் செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, அதை நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதன்படியே நாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் ஒழுக்கம்.

கடவுளிடம் பக்தி செலுத்துவது தனிமனிதனின் விருப்பம். ஒருவன் பக்தி உள்ளவனாகவோ இல்லாதவனாகவோ வாழ்வதில் பிறருக்குப் பாதிப்பு ஏதுமில்லை. 

ஆனால், ஒழுக்கத்துடன் வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கடமை. ஒழுக்கம் கெட்டவனாக வாழ்ந்தால் அது அவனுடன் தொடர்புடையவர்களைப் பாதிக்கும்; ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கும்.

எனவே, மக்களனைவரும் பக்தியைக் காட்டிலும் ஒழுக்கத்திற்கே முன்னுரிமை கொடுப்பது இன்றியமையாதது.
                                     *                               *                                *
‘சாணமும் சாமியும்’

விருந்துக்கு அழைக்கப்பட்டவனின் இலையில் சாணி உருண்டையை வைத்துச் சாப்பிடு என்றால் சாப்பிடுவானா? ஆதே ஆள், சாணியைக் கொழுக்கட்டை மாதிரிப் பிடித்து வைத்து, அதன் தலையில் அருகம்புல் குத்தி, குங்குமம் இட்டு, விழுந்து கும்பிடு என்றால் விழுந்து கும்பிடுகிறான்; தலையில் குட்டிக் கொள்கிறான்.

சாணி கடவுள் ஆனது எப்படி என்று கேள்வி கேட்கச் சொன்னால் நம்மவர்கள் கேட்கவே பயப்படுகிறார்கள்.

கடவுளாக்கப்பட்ட ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதே பாவம், தோஷம் என்று சொல்லிச் சொல்லி மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டார்கள்.
=====================================================================
[20.09.1956இல் பொன்மலையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவில் இடம்பெற்ற கருத்துரை இவை. முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின், ‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’ என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது].