எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 22 ஜூலை, 2020

பசியைப் போக்க மருந்து...வடகொரியா விஞ்ஞானிகள் தீவிர முயற்சி!!!

‘வடகொரியாவில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆமைக்கறி சாப்பிட அரசு அறிவுறுத்தல்’ -இது, இன்று வெளிவந்த ‘மாலை மலர்’[22.07.2020] நாளிதழ்ச் செய்தி.

பற்றாக்குறையைச் சமாளிக்க ஆமைக்கறி சப்பிடலாம், தவறில்லை. பசியைப் போக்க மருந்து கண்டறியும்படி விஞ்ஞானிகளை அரசு பணித்திருக்கிறதாம்! அது ஏன்?

உலகம் அறிந்திராத அதிசய நிகழ்வல்லவா இது?

மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், எவருக்கும் பசி எடுக்காது; கிடைக்கிற உணவை உண்டு உயிர் வாழ முடியும் என்று கொரியா அரசாங்கம் நினைக்கிறதோ?[இது குறித்துக் கூடுதல் செய்தி பின்னர் வரும் என்று எதிர்பார்க்கலாம்].

கொரியா நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கு நம் வேண்டுகோள்:

‘வயிற்றுப் பசியைப் போக்க மருந்து கண்டுபிடிக்கும் நீங்கள், மனிதகுலத்தைப் பாடாய்ப்படுத்துகிற ‘காமப் பசி’யைப் போக்கவும் ஒரு மருந்து கண்டுபிடிங்கய்யா.

காம உணர்ச்சி இல்லேன்னா, ‘இனவிருத்தி’ தடைபட்டு மனித இனம் பூண்டோடு அழிந்துவிடும் என்று எவரும் கவலைப்படத் தேவையில்லை. அது கடவுளுக்கான கவலை!!!