அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 21 ஜூலை, 2020

அர்ச்சகர்கள் காட்டில் அடைமழை!!!

ஆமையை வைத்து  பூஜை நடத்திய அர்ச்சகர்கள்... கொரோனாவில் இருந்து மீண்டெழுவோம் என நம்பிக்கை
#தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சில்கூர் பெருமாள் 
ஆலயத்திற்குள் புகுந்த ஆமைக்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிறப்பு 
வழிபாடு நடத்தினர்[தினத்தந்தி. பதிவு: ஜூலை 20,  2020 06:58 AM].

ஐதராபாத்
தெலங்கானாவின் ஐதராபாத் புகழ்பெற்ற சில்கூர் பெருமாள் 
ஆலயத்தின் சிவன் சன்னதியில், ஆமை ஒன்று காணப்பட்டது[தானாக 
வந்ததா?]ஆமையைப் பிடித்து அதற்குப் பூஜைகள் நடத்திய அர்ச்சகர்கள், விஷ்ணுபுராணத்தின் தசாவதாரத்தில், மகாவிஷ்ணுவின் அவதாரமான 
கூர்மம் என்று கருதப்படும் ஆமை, சிவன் சன்னதிக்கு வந்திருப்பதால், 
விரைவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மனிதகுலம் 
மீண்டெழும் என்று ‘நம்பிக்கை’[இந்த ஒற்றைச் சொல்தான்  ஆன்மிகவாதி
களின் மிகப் பெரிய ஆயுதம்!]தெரிவித்தனர்#
                 *                       *                   *                  *                   *               *              *
மேற்கண்ட செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது[சுட்டி மேலே].

பல்லாயிரம் கோடி உயிரினங்களில் ஆமையும் ஒன்று. பூஜை செய்து 
வழிபடும் அளவுக்கு அது தெய்வீகத் தன்மை பெற்றது எப்படி என்னும் 
கேள்வி வாசிப்போர்க்கு எழும் என்பதால், மகாவிஷ்ணுவின் அவதாரமான 
கூர்மத்தின்[ஆமை] மரபில் வந்தது அது என்று விளக்கம் தந்திருக்கிறார்கள் 
அர்ச்சகர்கள்.

ஆமை மட்டுமல்ல, அநுமாருக்கும், கழுகுக்கும், அண்டங் காக்கைக்கும்
[சனீசுவரனின் வாகனம்], பெருச்சாலிக்கும், நச்சுப் பாம்புக்கும்
[ஆதிசேடன்], எருமைக்கும்[யமதர்மனின் வாகனம்]பன்றிக்கும்
[வராக அவதாரம். பூமியைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்த அரக்கனுடன், 
பன்றி வடிவில் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டுப் பூமியை[பூமாதேவி] 
மீட்டார் மகாவிஷ்ணு]  வகை வகையாய் விதம் விதமாய்க் கதைகள் 
கற்பித்து அவற்றைத் தெய்வங்கள் ஆக்கியிருக்கிறார்கள். நம் மக்களும் 
இவற்றை நம்புகிறார்கள்; வழிபட்டுப் பரவசப்படுகிறார்கள்.

இம்மாதிரிக் கதைகள், நம் வாரிசுகள், ஒட்டுறவுகள், ஏன்...ஒட்டு
மொத்தத் தமிழ் இனத்தவரின் சிந்திக்கும் திறனை வற்றச் 
செய்துவிடும்; மூடத்தனங்களிலிருந்து விடுபடுவதைத் 
தடுத்துவிடும் என்று எச்சரித்தால் நம் மக்களில் பெரும்பாலோர் 
செவிமடுப்பதில்லை.

காரணம், அறியாமை.

இந்த அறியாமையை அறிந்துவைத்திருப்பதால்தான் அர்ச்சகர்கள் 
இற்றை நாளிலும் காலாவதி ஆகிப்போன புனைகதையை நினைவூட்டி, 
ஓர் ஐந்தறிவுப் பிராணியைப் பிரார்த்தனை செய்து கொரோனாவை 
விரட்டுவோம் என்கிறார்கள்.

இனி அடுத்தடுத்து, தங்களால் புனிதத்தன்மை ஏற்றப்பட்ட பிற 
ஐந்தறிவுப் பிராணிகளுக்கும் சிறப்பு வழிபாடு நிகழ்த்துவார்கள்.

பக்தியைப் பொருத்தவரை, அர்ச்சகர்கள் சொல்வதே வேதவாக்கு. 
எதைச் செய்தாலும், செய்தது ஆகம விதிகளின்படி என்பார்கள்.

ஆட்சியாளர்களும், பெரும்பான்மை மக்களும் அவர்களின் ஆதரவாளர்
களாக இருக்கும்வரை அவர்கள் காட்டில் மழைதான்!
==================================================================

======================================================================