திங்கள், 17 ஆகஸ்ட், 2020

அதி புத்திசாலி ஆத்திகனா, நாத்திகனா? -லண்டன் கல்லூரியின் ஆய்வு முடிவு.

‘யார் புத்திசாலி? கடவுள் நம்பிக்கையாளரா? நாத்திகரா? விடை சொல்கிறது புதிய ஆய்வு!’
February 05, 20184 viewsPosted By : ElangoAuthors
Image
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகப் 
புத்திசாலியாக இருக்கிறார்கள் எனவும், உள்ளுணர்வை விட உண்மையை அதிகம் 
நம்புபவர்களாக நாத்திகர்கள் உள்ளதால் அறிவாற்றல் அவர்களுக்கு அதிகமாக 
இருக்கிறது எனவும் லண்டன் இம்பீரியல் கல்லூரி நிகழ்த்திய ஆய்வில் தெரிய
வந்துள்ளது.

63,000-க்கும் அதிகமானவர்களை இணையதளம் மூலமாக தொடர்புகொண்டு, 
அரை மணி நேரத்தில் அவர்களுடைய  திட்டமிடல், பகுத்தறிதல், நினைவாற்றல் 
முதலியவை குறித்து 12 வகையான சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. இறுதியில் 
அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா அல்லது இல்லாதவரா, அல்லது கடவுள் 
இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் எனும் நடுநிலைவாதியா (Agnostics) 
என்பதையும் குறிப்பிடச் செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவில், இறை நம்பிக்கை உள்ளவர்களைவிட நாத்திகர்கள் அதிக 
அறிவுள்ளவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. Agnostics எனப்படும் கடவுள் 
உண்டா இல்லையா என்பதைக் கூறிவிட முடியாது என நடுவுநிலை எடுப்பவர்கள் 
இறைநம்பிக்கை உள்ளவர்களை விடப் புத்திசாலியாக இருந்தாலும், நாத்திகர்களுக்கு 
இணையான அறிவாளிகளாக இல்லை என்றும் ஆய்வின் முடிவில் தெரிய 
வந்திருக்கிறது.

இதன்மூலம், கடவுள் நம்பிக்கையானது அறிவுத்திறனுடன் எதிர்மறை விகிதத்தில் 
தொடர்பு கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது, கடவுள் நம்பிக்கை 
அதிகரிக்கும் விகிதத்திற்கு இணையாக அறிவுத்திறன் குறையும். அறிவுத்திறன்
அதிகரிக்கும் அளவு கடவுள் நம்பிக்கை குறையும் என்பது இதன்பொருள். 

இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் இருக்கும் வித்தியாசமான நம்பிக்கைகள் மற்றும் 
நடத்தைகள்தான்  இதுபோன்ற வேறுபாட்டிற்குக் காரணம் எனவும் ஆய்வில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடவுள் நம்பிக்கை என்பது நாடு, பாலினம், வயது 
என எவ்வித்தியாசமும் இன்றி அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் நான்கில் 
ஒருவர், கஷ்டமான சூழ்நிலைகளில், பிரார்த்தனை செய்வதைக் கடந்த மாதம் 
வெளியான ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. Agnostic-கள் மற்றும் 
நாத்திகர்களில் சிலர் மிகமோசமான சூழல்களை எதிர்கொள்ளும்போது மட்டுமே 
பிரார்த்தனை செய்கின்றனர். இவர்களில் கால் பங்கினர் தனிமையை 
எதிர்கொள்வதற்காகவோ, ஓரளவு சிறப்பாக உணர்வதற்காகவோ இத்தகைய 
செயல்களைச் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, 50%க்கும் அதிகமான இளைஞர்கள், இறைவழிபாடு 
மேற்கொள்கின்றனர். ஆனால், அவர்களில் 3இல் ஒருவர் மட்டுமே, தேவாலயங்கள் 
மற்றும் சில வழிபாட்டுத்தலங்களில் கடவுளை வழிபடுகின்றனர்.