'விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளோம். அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறிச் சிலைகளை அமைப்போம் என்று இந்து முன்னணி அறிவிப்பு' -‘இந்து தமிழ் திசை’ https://www.hindutamil.in/news/tamilnadu/569987-ganesh-statue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
இச்செய்திக்கும் என் கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
“நான் சொர்க்கம் போறேன்...வழிவிடுங்க”...கதை.
“அப்பா, காலங்காத்தால காப்பிகூடக் குடிக்காம எங்கே கிளம்பிட்டீங்க?” என்று என் மகன் கேட்டான். அதே கேள்வியைப் புருவம் சுருக்கி, பார்வையில் வினாக்குறி தேக்கி என் மனைவியும் வினவினார்.

“தெரு முனையில் ‘நம்ம ஆளுங்க’ விநாயகர் சிலையைப் ‘பிரதிஷ்டை’ பண்றாங்க. தரிசனம் பண்ணப்போறேன். அப்புறம் ஊர்வலமா அவரை எடுத்துட்டுப் போயி, கடல் நீரிலோ ஆத்துத் தண்ணியிலோ கரைச்சாகணும். ஊர்வலத்திலும் கலந்துக்கிறதா இருக்கேன்.”
“கொரோனாக் கிருமி கொடூரத் தாண்டவம் ஆடிட்டிருக்கு. ஒட்டுமொத்த உலகமும் பயந்து நடுங்கிட்டிருக்கு. இது தெரியாதா உங்களுக்கு?”
“இந்தப் பயம் தெருமுனையில் பிள்ளையாரை ‘இருக்க வெச்சி’க் கும்பிடுறவங்களுக்கு இல்ல. எனக்கும் இல்ல.”
“இந்த ஒரு வருசம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுலேன்னா ஒன்னும் ஆயிடாது.”
“பிள்ளையார் கோவிச்சுப்பாரு. நிறையப் பாவம் வந்துசேரும்.”
“உங்க வயசுக்குக் கொரோனா தொத்துனா செத்துப்போயிடுவீங்க.” -சினம் தணித்துக் கனிவான குரலில் எச்சரித்தான் என் மகன்.
“விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துக்கிறதால நான் செத்துடுவேன்னா அது ரொம்ப நல்ல சாவு. நேரா சொர்க்கம் போயிடுவேன்.”
நான் உதிர்த்த வைர வார்த்தைகள் என் மகனையும் மனைவியையும் மௌனம் சுமக்க வைத்தன.
நான் தெருமுனை நோக்கி நடந்தேன்.
=====================================================================
எச்சரிக்கை!
இது என் சொந்தக் கதைதான். அதாவது, நான் எழுதிய கதை. என் வீட்டில் நிகழ்ந்த கதை[நிகழ்வு] அல்ல. இவ்வகையிலான நிகழ்வுகள் எந்தவொரு வீட்டிலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதை எழுதினேன்.

மன்னிப்பு வேண்டல்:
பதிவை வெளியிட்டபோது[பிற்பகல் 12.41 மணி] மேற்கண்ட இந்த ‘எச்சரிக்கை’ விடுபட்டுவிட்டது. சற்று முன்னர்[மாலை 07.30 மணி], என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் அண்டை வீட்டு நண்பர், “எப்போது பிள்ளையார் பக்தராக மாறினீர்கள்?” என்று கேட்டு நக்கல் செய்தபோதுதான் செய்த தவற்றை அறிய முடிந்தது[Aexa Linking Sites இல் 04 குறைந்துவிட்டது]. பதிவின் இறுதியில் ‘எச்சரிக்கை’யை இணைத்தேன். பொறுத்தருள்க.
நன்றி.