வியாழன், 26 ஆகஸ்ட், 2021

விந்தணுவின் 'எண்ணிக்கை' குறைவதைத் தடுப்பது எப்படி?


ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துகொண்டே சென்றால்மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏறத்தாழ 200 ஆய்வுகளின் முடிவுகளுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

விந்தணுக்களின் உற்பத்தி குறைவதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

*ஆடவர்களின் உள்ளாடை மிக இறுக்கமாக இருந்தால், விதைகளில் அதிக வெப்பம் பரவும்; விந்தணு உற்பத்தி குறையும்.

*மொபைலைக் கால்சட்டைப் பையில் வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும்.

*மன அழுத்தத்திற்கு இடம் தருதல் கூடாது. தீராத கவலைகளில் மூழ்கிக் கிடப்பது தொடர்ந்தால், பாலுணர்வில் ஆர்வம் குறையும். அது ஆடவனின் ஆண்மைத்தன்மையை வெகுவாகக் குறைக்கும். 

*குடிப்பழக்கம் டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். அது குறைவதால் விந்தணு உற்பத்தியும் குறையும். 

*புகைப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம். தொடர்ந்து புகை பிடிப்பது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

*அதிகச் சூடான வெந்நீரில் தொடர்ந்து குளிப்பதும் மேற்கண்ட பாதிப்புக்குத் துணைபோகும். தேவைப்பட்டால் மிதமான சுடுநீரில் குளிக்கலாம்.

*எண்ணையில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்குச் சிப்ஸ் போன்றவற்றை  மிகுதியாக உண்பதும் விந்தணு குறைவதற்குக் காரணமாக அமையும்.

*கணினியை அதிக நேரம் தொடைகளின் மீது வைத்துப் பயன்படுத்துவதும் விந்தணு உருவாவதைத் தடுக்கும்.

ஆக,

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் விந்து உற்பத்திக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். விந்துவின் வீரியத்தை அதிகரிப்பதற்கான உணவுகளைத் தேர்வு செய்து உண்பதும் முக்கியம்.

அதிக நேரச் சுகபோகத்துக்காகச் சிட்டுக்குருவி லேகியம், தங்கப்பஸ்பம், நைட்பில்ஸ், வயாகரா, நயாகரா, ரப்பர்பேண்ட், ஆயின்மெண்ட் போன்றவற்றின் தயவை நாடுவதெல்லாம் அவரவர் விருப்பம் சார்ந்தது! ஹி...ஹி...ஹி!!

====================================================================================

உதவி: இணையம்