அண்டவெளியில் உள்ள கணக்கிலடங்காத நட்சத்திரங்கள், கோள்கள் என்னும் அதிபிரமாண்டக் குவியல்களுக்கிடையே, பிரம்மதேவனால் நிர்மாணிக்கப்பட்ட சொர்க்கமும் நரகமும் இருப்பதாகப் பக்தகோடிகளான நம் முன்னோர்கள் நம்பினார்கள்.
இக வாழ்வில் அதிக அளவில் பாவம் செய்தவர்கள் நரகம் செல்வார்கள் என்பதும், புண்ணியம் சம்பாதித்தவர்கள் சொர்க்கம் சேர்வார்கள் என்பதும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவர்களின் வழித்தோன்றல்களான நம்மிலும் மிகப் பெரும்பாலோர் இதையெல்லாம் நம்புகிறார்கள்.
இவர்களில் சிலர், ஆயுட்காலம் முடியும்வரை காத்திருந்து, தேடிச் சேகரித்த புண்ணியத்தைச் சுமந்துகொண்டு சொர்க்கம் செல்ல விரும்பாமல், இளம் வயதிலேயே நேரடியாக அங்கே செல்வதற்கான சில குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்தார்கள். அவற்றில் ஒன்றுதான்.....
'விநாயகர் சதுர்த்தி' நாளில் பிள்ளையாரைச் சுமந்துபோய் ஆற்று நீரில் கரைக்கும்போது சுழலில் சிக்கி உயிரிழப்பது[இது பிள்ளையாரின் அருட்பார்வையால் நிகழ்வது]!
ஆண்டுதோறும் கணிசமான எண்ணிக்கையிலான பக்தர்கள் இவ்வாறு மரணத்தைத் தழுவிச் சுவர்க்கபுரியை அடைகிறார்கள் என்பதை ஊடகச் செய்திகளால் அறிகிறோம்.
சற்று நேரத்திற்கு முன்பு வெளியான ஒரு செய்தியின் மூலம்[ஆதாரம் கீழே], பிள்ளையார் மட்டுமல்ல, அன்னை[மாதா] துர்க்கா தேவியைச் சுமந்து சென்று கரைக்கும்போது நீரில் மூழ்கி இறந்தாலும் சொர்க்கம் சேரலாம் என்பதை யாவரும் அறிந்து செயல்படக் கடவீராக!
[சிலை கரைக்கும் போது 6 பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்© தி ஸ்டேட்ஸ்மேன்]
//ஆஜ்மீர் மாவட்டம், நந்தா-ஜி-கி-தானி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழு, புதன்கிழமை மாலை துர்கா மாதாவின் சிலையை மூழ்கடிப்பதற்காகச் சுரங்கப் பகுதியில் உள்ள மழைநீர்க் குளத்தில் சிலையுடன் ஊர்வலமாகச் சென்றது.
சிலை மேற்பரப்பில் மிதக்காததால், அவர்களில் சிலர் அதை இறக்கி முன்னோக்கி நகர்த்த முயன்றனர், ஆனால், அவர்கள் குளத்தில் முழுகிவிட்டனர்[நேரடிச் சொர்க்கபுரிப் பயணம்].
அவர்களுடன் வந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றது தோல்வியில் முடிந்தது. ஆறு உடல்கள் நசிராபாத் நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டன. இறந்தவர்கள் கஜேந்திரா, ராகுல் மேக்வால், லக்கி, பவன் குமார், ராகுல் ராய்கர் மற்றும் ஷங்கர் லால் (அனைவரும் 20-35 வயதுடையவர்கள்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏழாவது பக்தரைக் கண்டுபிடிப்பதற்கான புதிய தேடுதல் இன்று காலை முதல் நடந்துவருகிறது என்பது செய்தி//https://www.msn.com/en-in/news/other/six-devotees-drown-during-idol-immersion-in-ajmer/ar-AA12EjFM?ocid=msedgdhp&pc=U531&cvid=7c26b3ac4dc745d8b3af1393ff6b6336 -[SNS - 38m முன்பு]