அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக, தும்மும்போது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும்வெளியேறும் சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களை அதிவேகக் காணொலி[video] மூலம் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இது போஸ்டன் நகரில் அமெரிக்க உடலியல் கழகத்தின் 'திரவ இயங்கியல்' பிரிவின் கூட்டமொன்றில் காட்டப்பட்டது.
வாயிலிருந்தும் மூக்கிலிருந்து திரைகளாக, குவியல் குவியலாக, துளித் துளியாக வெளியேறும் நீர்த்திவலைகள், அருவி நீர் போல் பரவுவதைப் இந்த வீடியோ காண்பிக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக, இவற்றின் மூலம் நோய்க் கிருமிகள் எவ்வாறு காற்றில் பரவுகின்றன என்பதை ஆராய இருக்கிறார்களாம்.
இந்த ஆய்வின் நோக்கமே[இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவர், மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ’லிடியா பூருபா’ என்பவர்] இந்தத் தும்மலின் திரவ வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நோய்க் கிருமிகள் பிறருக்குத் தொற்றாமல் தடுப்பதுதான் என்கிறார்கள்.
ஆய்வாளர்களின் செயல்பாடு பெரிதும் வரவேற்கத்தக்கதே. அதே வேளையில்.....
ஆண் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்வது சிறந்த தசைப் பயிற்சியாக அமைகிறதாம். ஹார்மோன்கள் ஒழுங்காக வேலை செய்யவும், உடலிலுள்ள கலோரிகள் எரிக்கப்படவும் இது உதவுகிறதாம். முத்தம் எவ்வளவு அழுத்தத்துடன் இருக்கிறதோ அவ்வளவுக்கு அதனால் கிடைக்கும் பலனும் அதிகமாகிறதாம். இன்னும் ஏதேதோ ரசாயன மாற்றம் எல்லாம் நடக்குதாம்.
இப்படி இணையத்தில் ஆளாளுக்குப் புருடா விட்டுட்டிருக்காங்க.
முத்தத்தின்போது, பெண்ணின் வாயிலிருந்து வெளியாகும் உமிழ்நீர் வெகு சுவையாக இருக்கும் என்றெல்லாமும் கதை அளக்குறாங்க.
இதுகளைப் பத்தியெல்லாமும் ‘டாக்டர் லிடியா பூருபா குழு’ தீவிரமா ஆராய்ச்சி செய்து முடிவை அறிவித்தல் வேண்டும் என்பது, முத்தமிட வாய்ப்பில்லாமல் அலையும் இளவட்டங்களின் விருப்பம் ஆகும்!
ஆய்வாளர்கள் விரைந்து செயல்படுவார்களா?!
* * * * *