மூளைக்கான இரத்த விநியோகம் தற்காலிகமாகச் சீர்குலைவதால் ஏற்படும் இருதய நிகழ்வு, ‘சிறிய பக்கவாதம்’ அல்லது, ‘தற்காலிக இஸ்கிமிக் தாக்குதல்’ [Transient ischaemic attack (TIA)] என்று அழைக்கப்படுகிறது. A transient ischaemic attack (TIA) or "mini stroke" is caused by a temporary disruption in the blood supply to part of the brain].
இந்தத் ‘தற்காலிக இஸ்கிமிக் தாக்குதல்’ என்பது[TIA > Transient ischaemic attack] எதிர்காலத்தில் முழுப் பக்கவாதம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையாகும்.
இது[TIA], பொதுவாகச் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிற ஒரு தாக்குதல்[24 மணி நேரம்வரை நீடிக்கவும்கூடும்]ஆகும்; நிரந்தரச் சேதத்தை ஏற்படுத்தாது.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு உடனடியாக ஆஸ்பிரின் வழங்கப்பட வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கட்டாயம். ஏனென்றால், இந்தத் தாக்குதலுக்கு உள்ளான 3 பேரில் ஒருவருக்கு, பின்னர் பக்கவாதம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினி பக்கவாதம் அல்லது, தற்காலிக இஸ்கிமிக் தாக்குதலின்(TIA) அறிகுறிகள்:
*பேச்சு குழறுதல்.
*பார்வை பாதிப்பு.
*முகம், கைகள், கால்கள் ஆகியவற்றில் உணர்வின்மை அல்லது பலவீனம்.
=========================================================================