அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 15 டிசம்பர், 2022

‘வயாகரா’வும், உடலுறவில் ‘உச்சம்’ தொட்டவர்களின் மரணங்களும்!!!

மெரிக்காவின் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்படி, 1998இல் வயாகரா மாத்திரை உட்கொண்டதால் 1473 பேர்  பாதிக்கப்பட்டனர். அதில் 522 பேர் இறந்துவிட்டனர். 517 பேருக்கு நெஞ்சுவலியும் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது என்று தனது மருத்துவக் கட்டுரையில் அமெரிக்க இதயநோய் நிபுணர் ’டாக்டர் சஞ்சய் கௌல்’ கூறினார்

ஆனால், வயாகரா தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் இது நாள்வரை தொடர்ந்து இதை மறுத்தே வருகிறது. 

 

ஆனால், வயாகரா பயன்படுத்துவதால் தலைவலி, கழுத்து முகம் நெஞ்சு பகுதிகள் சிவந்துபோதல், செரிமானமின்மை, வயிற்று வலி, மூக்கடைப்பு, மூக்கில் ஒழுகுதல், முதுகு வலி, தசை வலி, மங்கிய பார்வை, கேட்கும் திறன் இழத்தல் அல்லது குறைதல், தலைசுற்றல், அரிப்பு போன்றவை ஏற்படும் என்பதை  ஃபைசர் ஒப்புக்கொள்கிறது.

 

மேலும், மூச்சுத்தினறல்,  பார்க்கின்ற அனைத்தும் நீல வண்ணத்தால் பூசப்பட்டவையாகத் தெரிதல், தொடர்ச்சியான விறைப்பால் இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, தீவிரமான குறைந்த இரத்த அழுத்தம்(ஹைபோடென்ஷன்), மாரடைப்பு, வெண்ட்ரிக்குலர் அரித்திமியாக்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ரத்தக் கசிவு என இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுகிறதாம்.

 

தொடர்ந்து இந்த மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு, பார்வை இழப்பு, காதுகேட்கும் திறன் இழப்பு, கல்லீரல் குறைபாடெல்லாம் ஏற்படுவது உறுதி என்கிறது கனடா நாட்டு மருத்துவ அறிக்கை ஒன்று. 

 

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் சில சமயங்களில் ’சில்டெனாபில்’ பார்வைக் குறைபாட்டை உருவாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறது.


இங்கிலாந்து, கனடா நாடுகள் உட்பட, பல நாடுகள் வயாகரா மீது சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆனாலும், அமெரிக்கா பிடிவாதமாக இருக்கிறது. ஏனெனில் வயாகரா அமெரிக்காவின் கெளரவம்.

 

வயாகராவின் தயவில், சுகபோகத்தில் திளைத்துத் திடீர் மாரடைப்பால் மரணத்தைத் தழுவியவர்களின் கதைகள்:


’அவர் தமிழ்ச் சினிமாவின் பிரபலமான டைரக்டர். சில வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பல புதுமுக நாயகன், நாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. புதிய படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துவந்தது. அன்றைய படப்பிடிப்பை உற்சாகமாக முடித்தார் இயக்குனர். அன்றிரவு பத்து மணிவரை துணை இயக்குநர்களுடன்  அடுத்த நாளுக்கான படக்காட்சிகள் பற்றி விவாதித்தார். பின்னர்.....


வயாகரா மாத்திரை போட்டுக்கொண்டு காத்திருந்தார்.


இரவு 11 மணிக்குப் படத்தின் கதாநாயகி கதவைத் தட்டினார். அவரை உள்ளே அனுமதித்த அவர் அடுத்த நாள் எடுக்கப்போகும் பாடல் காட்சியை விளக்கினார். பாடல் முழுவதும் முதல் இரவுக் காட்சியாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுக் விவரித்தார்.


விவரித்ததோடு, அந்தக் காட்சிக்கான ஒத்திகையை நடத்திப் பார்க்கலாமா என்று நடிகையிடம் கேட்க, கதாநாயகிக்கு மெல்லப் புரிந்தது டைரக்டரின் நோக்கம்; அறிமுகப்படுத்தியவர் என்பதால்  ஒத்துழைத்தார்.


கேமிராவும் வெளிச்சமும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர்.


உடலுறவில் ‘உச்சம்’ தொட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எழ முயன்றார்; முடியாமல் விழுந்தார்.


விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை.


இந்தக் கதை இப்படி இருக்க, சென்னையில் பிரபல மென்பொருள்[கணினி] நிறுவனத்தில் பணிபுரியும் இளம் தம்பதிகள் தேனிலவுக்காக ஏற்காடு சென்றனர்.


லேடிஸ் சீட், பகோடா பாயிண்ட் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு விடுதிக்கு வந்தனர்.


இரண்டு வயாகரா மாத்திரையை முழுங்கிவிட்டு அந்தரங்க உறவை அதிரடியாகத் தொடங்கினார் மென்பொருள் பொறியாளர்.


துணைவியின்  வற்புறுத்தலுக்காகக் கொஞ்சம் இடைவேளை விட்டார். ஆனால் வயாகராவின் கோரப்பிடி சற்றும் தளரவில்லை..


இடைவேளைக்குப் பின்னரான காட்சி குளியலறையில் தொடங்கியது. வென்னீர் குளியலுக்குப் பின்னரான உடலுறவில் உச்சநிலை[கிளைமாக்ஸ்] நெருங்கியது. ஆனால் அந்தோ.....


அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலைகுலைந்தார் பொறியாளர். ஹிட்ச்காகின் சைக்கோ திரைப்பட குளியலறைக் காட்சி போல கிளைமாக்ஸ் முடிந்துவிட்டது.


இப்படி ஏராளமான கதைகள் உண்டு இந்த மேஜிக் மருந்துக்கு.

* * * * *

*****நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ‘நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது. கட்டமைப்பு சற்றே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

========================================================================தொடர்புடைய ‘வயாகரா’வின் ருத்ரதாண்டவக் கதைகள்:

 https://kadavulinkadavul.blogspot.com/2022/06/blog-post_9.html

https://kadavulinkadavul.blogspot.com/2021/12/blog-post_46.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக