24.12.2022இல் ‘ஈஷா ஜக்கி’யின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளை விவரித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன்https://kadavulinkadavul.blogspot.com/2022/12/blog-post_95.html. அதில் ஒரு காணொலி இணைக்கப்பட்டுள்ளது. கீழே தென்படும் அதை மீண்டும் ஒரு தடவை சொடுக்கி, அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை நினைவுகூருங்கள்.
அதில் பேசுபொருளாக இருப்பவர் ‘சுபஸ்ரீ’ என்னும் இளம் பெண்.
ஜக்கியின் ‘ஈஷா’ மையத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்த அவர் அப்புறம் என்ன ஆனார் என்னும் கேள்வி உங்களைத் தவிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் என்பது உறுதி.
அதே கேள்வியை இப்போதும் கேட்பீர்களேயானால் அதற்கான பதில் உங்கள் மனதை வெகுவாக வருத்தக்கூடும்.
ஆம். அந்த சுபஸ்ரீ இப்போது உயிருடன் இல்லை; அழுகிய சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார் என்பது செய்தி.
அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது, தற்கொலை செய்தாரா என்பன போன்ற கேள்விகளும் எழுவது இயல்பே.
சுபஸ்ரீயின் சடலத்தைக் காவல்துறை மீட்டெடுத்து கூராய்வுக்கு அனுப்பியுள்ளது.
இது நேற்றைய செய்தி.
அவரின் மரணம் குறித்த காணொலி வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக