‘மெர்ஸின்’ என்பது அந்தப் பெண்ணின் பெயர்.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட இவரைக் கடந்த ஆண்டு இவர் மகன் ‘ஜிம்’முக்கு அழைத்துப்போனார். உரிய முறையில் பயிற்சிகள் செய்யக் கற்றுக்கொடுத்தார்.
இப்போது இவர் 53 பவுண்டு எடையுள்ள ‘பார்பெல்லை'த் தூக்குகிறார், அதுவும் தன்னுடைய 96ஆவது வயதில் என்றால் நம்ப முடிகிறதா?
கீழே இடம்பெற்றுள்ள காணொலி[முகவரியைச் சொடுக்குக], நம்பித்தான் தீரவேண்டும் என்கிறது.
* * * * *
காணொலியைக் காணுமுன், ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் நம் முன்னோர்களின் அனுபவ உரையை வாசித்துவிடுங்கள்.
“தளராத தன்னம்பிக்கையால் எந்த வயதிலும் எதையும் சாதிக்கலாம்!"
காணொலி முகவரி:
https://twitter.com/i/status/1612521329961361409
==============================================================================
கடந்த செவ்வாயன்று பகிரப்பட்ட இந்தக் காணொலி, பகிரப்பட்டதிலிருந்து, 20,000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்தது.
எடை தூக்கும்போது ‘மெர்ஸின்’ முகத்தில் மலர்ந்த புன்னகை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பயனர்களில் சிலரின் கருத்துரைகள்:
*"ஆச்சரியமாக இருக்கிறது!"
*"குறிப்பிடத்தக்கது!"
*"மெர்ஸ் அதைச் செய்ய முடிந்ததால், நம்மாலும் முடியும்!"
=========================================================================