உச்ச நடிகர் ரஜினி உண்மையில் மிக நல்லவர்; பக்திமானும்கூட.
இவர் கடவுள் பக்தராக இருப்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. பக்தியின் பெயரால் மனம்போன போக்கில் சில நேரங்களில்[பல நேரங்களில்?] எதையாவது இவர் உளறிவைப்பதுதான் நெருடலாக இருக்கிறது.
மேலே[பட நகலில்] என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மீண்டும் கவனியுங்கள்.
மயில்சாமி இறந்தது சிவனின் கணக்காம். அவர் தனக்கு உகந்த நாளில்[சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி மட்டும்தானா?] தன் பக்தரான மயில்சாமியை எடுத்துக்கொண்டாராம்.
சிவனுக்கு உகந்த நாளான இந்தச் சிவராத்திரி என்னும் ராத்திரி இனி வரவே வராதா?
வரும்..... வரும்..... வரும்; ஆண்டுதோறும் வரும். இது உறுதி.
வரவிருக்கும் சிவராத்திரிகளில் 43 ராத்திரிகளை ஒதுக்கிவிட்டு, 44ஆவது சிவராத்திரியில்[மயில்சாமிக்கு அப்போது 100 வயது] தன்னுடைய உண்மைப் பக்தரான மயில்சாமியைத் தன்னோடு இணைத்துக்கொண்டிருக்கலாமே?
ஏன் செய்யவில்லை?
பலருக்கும் பலவகையிலும் உதவி செய்து வாழ்ந்த ஒரு நல்ல மனிதரை ஏன் அற்ப ஆயுளில் சாகடித்தார் சிவன்?
“ஓ சிவபெருமானே, இனியேனும் உன்னுடைய உண்மைப் பக்தர்களை 100 ஆண்டுகள் வாழ்ந்திட அனுமதிப்பாயாக” என்று சிவனின் அதி தீவிரப் பக்தரான ரஜினி முழுமுதல் கடவுளான அவருக்கு ஆலோசனை வழங்கலாம்.
வழங்குவாரா சூப்பர் ஸ்டார்?!
=================================================================
***‘ஒரு ஊழியனின் குரல்’ என்னும் வலைப்பக்க வாசிப்பே இப்பதிவு உருவாகக் காரணம். எஸ்.ராமன் அவர்களுக்கு என் நன்றி.