திங்கள், 20 பிப்ரவரி, 2023

இன்பபுரிக்கு இட்டுச்செல்லும் ஏழு இயங்குநீர்ச் சுரப்பிகள்[Sex Hormones]!!!

சியின்மை, தூக்கமின்மை, மறதி, மண்டையில் பட்டாம்பூச்சி சிறகடித்தல், நெஞ்சில் படபடப்பு போன்றவை உடம்பில் காதல் எனப்படும் காமம்  களிநடனம் புரிவதற்கான அறிகுறிகள் ஆகும். இதற்குக் காரணம், உடலில் சுரக்கும் சில பாலியல் சுரப்பிகள்[Sex Hormones]தான்.

உடலமைப்பையும் மனப்பக்குவத்தையும் பொருத்து இயங்குநீர் சுரப்பது கூடும்; குறையும். சுரக்கும் நீரின் அளவைப் பொருத்துக் காம உணர்ச்சி கட்டுக்குள் இருப்பதும், கொட்டமடிப்பதும் அமையும்.

இயக்குநீர்ச் சுரப்பிகளைக் ‘காமநீர்ச் சுரப்பிகள்’ என்றழைப்பதும் ஏற்புடையதே.

அந்தச் சுரப்பிகளின் எண்ணிக்கை ஏழு என்கிறார்கள் உடற்கூறு ஆய்வு அறிஞர்கள்.

அந்தப் பொல்லாத ஏழு சுரப்பிகளும் அவை ஆற்றும் பணிகளும்:

டெஸ்டோஸ்டிரோன்(Testosterone): ஆண்கள் பருவநிலையை அடையும் பொழுதோ அல்லது அதற்கு முன்னரோ இது செயல்படத் தொடங்கும். இதன் வேலை விந்தணுவை உற்பத்தி செய்வது.

ஈஸ்ட்ரோஜன்(Estrogen): இது, பெண்கள் பருவ வயதை அடையும்போது தன் திருவிளையாடலைத் தொடங்கும். கருப்பை[அண்டம்] சம்பந்தப்பட்ட பணிகளை இது ஆற்றுகிறது.

அட்ரினலின்[Adrenaline]: எதிர்பாலினத்தின் தோற்றம், செயல், பேச்சு போன்றவற்றால் ஈர்க்கப்படுவது இது சுரப்பதால்தான். உண்ண மறந்து, உறக்கம் இழந்து, தவியாய்த் தவித்துத் துரும்பாய் இளைத்துப்போகக் காரணம் இது கட்டுக்கடங்காமல் சுரப்பதுதான்.

டோபோமைன்(Dopamine): அடிக்கடி தன் மனம் கவர்ந்த நாயகன் அல்லது நாயகியைத் தனிமையில் சந்திக்கத் தூண்டுவது இது. இது சுரப்பதால்தான் காதலி அல்லது காதலனின் அருகாமை இன்பபுரிக்குக் இட்டுச் செல்கிறது. துணையுடன் இணைந்து காம சுகத்தின் உச்சத்தைத் தொடத் தூண்டுவதும், அது வாய்க்காதபோது சுயஇன்பம் செய்ய வைப்பதும் இதன் கைங்கரியம்தான்.

சோரடோனின்(Serotonin): தனக்குப் பிடித்தமானவருடன் விரும்பியபடியெல்லாம் இருந்து இன்புறுவது போல் கனவு காண வைப்பது இந்தச் சுரப்பி ஆற்றும் பணி. அதாவது, காலநேரம் கருதாமல் மண்டைக்குள் கனவுக்குதிரையை ஓடவிடுவது இந்தக் கருமந்தரச் சுரப்பி சுரப்பதால்தான்.

ஆக்சிடோசின்(Oxytocin): திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ, இணைபிரியாமல் இருந்து, காலமெல்லாம் மனம் ஒத்து வாழ்வதற்கான நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது இந்தச் சுரப்பி.

குழந்தை பிறக்கும் சமயத்திலும் ஆக்ஷிடோசின் சுரக்கிறது. அதனால்தான் தாய்க்கும் சேய்க்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டாகிறது. எனவே, இதைத் தொட்டில் ஹார்மோன் எனவும் செல்லமாக அழைப்பார்கள்.

வசோப்ரெஸ்ஸின்(Vasopressin): ’ஒருவனுக்கு ஒருத்து. ஒருத்திக்கு ஒருவன்” என்னும் ஒழுக்க நெறி போற்றி, கற்புக்கரசனாகவும், கற்புக்கரசியாகவும் வாழ்ந்திடத் தூண்டும் மிக நல்லதொரு சுரப்பி இது.

குறிப்பு: இந்தப் பதிவுக்கு ஆதாரமாக அமைந்த கட்டுரை நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது[நகலெடுத்துப் பதிவு செய்கையில் முகவரி காணாமல்போனது] என்பது என் கணிப்பு. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சிதைக்காமல், முறைப்படுத்தியும் எளிமைப்படுத்தியும் பதிவு செய்துள்ளேன். இயக்குநீர்ச் சுரப்பிகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக விவரிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை என்பது அறியத்தக்கது.

=========================================================================