வெள்ளி, 10 மார்ச், 2023

தமிழை அவமதித்த சங்கிகள்! உதைக்க மறந்த தமிழர்கள்!!

‘கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது பற்றிய ‘கருத்துக் கேட்பு’க் கூட்டம், மதுரை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி, திருநெல்வேலியில் நடந்ததாம். அதில் இந்துமதத்தைச் சேர்ந்த பக்தர்கள் என்னும் பெயரில் கலந்துகொண்ட, சில சங்கித் தறுதலைகள் தமிழில் குடமுழுக்குச் செய்வதை எதிர்த்ததோடு, சுகிசிவம் போன்ற சைவ சமயச் சான்றோர்களை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டுக் குழப்பம் விளைவித்தார்கள்’ என்பது ஓரிரு நாட்களுக்கு முன்னரான செய்தியின் சாரம்.

“தமிழன் கட்டிய கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்வது பற்றிக் கருத்துக் கேட்கக் கூட்டமாம்!!! இதில் கருத்துக் கேட்க என்ன உள்ளது? தமிழுக்குச் செய்யும் அவமதிப்பு அல்லவா இது?” என்று கேட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொதித்தெழுந்திருக்க வேண்டும் இந்தத் தகவல் காதுக்கெட்டிய சில வினாடிகளில்.

செய்யவில்லை.

கூட்டத்தில் தமிழையும் தமிழ்ச் சான்றோரையும் அவமதித்த சங்கிகளுக்கு, சைவத் தமிழர்கள் ‘கவனித்து’ப் பாடம் கற்றுகொடுக்கத் தவறிவிட்டார்கள்.

“மேடையில் இந்துக் கடவுள்களின் படங்கள் எதுவும் இல்லை. இதனால் இந்துக் கடவுள்களின் போட்டோவை வைக்க வேண்டும்” என்று கூச்சல் போட்டிருக்கிறது அந்த ஓநாய்க் கூட்டம்.

“ஒன்றா இரண்டா, ஆயிரக் கணக்கில் சாமிகளை உற்பத்தி செய்திருக்கிறீர்கள். அவர்களில் எந்தச் சாமியின் படத்தை வைப்பது என்று தமிழ்ப்பற்றாளர்கள் கேட்கவில்லை; ஏதோ ஒரு சாமி படத்தையும் வைத்திருக்கிறார்கள்.

கருத்துத் தெரிவிக்கும் படிவத்தில் குடமுழுக்கு சமஸ்கிருதத்திலா, தமிழிலா, எம்மொழியில் செய்வது என்று கேட்காமல், தமிழில் குடமுழுக்குச் செய்வது எப்படி என்று கேட்கப்பட்டிருந்தது தவறு என்று குமுறிக் கொந்தளித்தார்களாம் ‘பாஜக’ ஆதரவுக் கோமாளிகள்.

தமிழினத்தாரைப் பார்த்து நாம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.....

“சமிஸ்கிருதம் தேவ பாஷை. கடவுளால் அசரீரியாகச் சொல்லப்பட்டது. அது ஒரு மொழி மட்டுமல்ல, மந்திரம். கடவுள் விரும்பும் அந்த மந்திரத்தைச் சமஸ்கிருதத்தில்தான் சொல்ல முடியும். தமிழில் சொல்ல முடியாது. அது நீஷ பாஷை” என்று சில அயோக்கியர்கள் கட்டிவிட்ட கதைகளின் மீது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நம்பிக்கை வைத்து முழு முட்டாள்களாகவே இருக்கப்போகிறீர்கள்?”

இது நான் உங்கள் முன்வைத்த கேள்வி. உங்களுக்கு அறிவுறுத்த விரும்புவது.....

தமிழர்களாகிய நம் மூதாதையர்கள் கட்டிய கோயில்களில் நம் தமிழுக்கு உரிய மரியாதை இல்லையென்றால், அத்தனைக் கோயில்களையும் கல்வி நிலையங்கள் ஆக்கிவிட்டு, அது உங்களால் இயலாதென்றால் புறக்கணித்துவிட்டு, வீட்டோடு இருந்து நீங்கள் போற்றும் தமிழ்க் கடவுள்களை வழிபடுங்கள் என்பதுதான்!

தொடர்புடைய காணொலி:

===========================================================================================

https://tamil.oneindia.com/news/thirunelveli/no-deity-picture-in-banner-clash-in-public-hearing-meeting-about-performing-kudamuzku-bytamil-in-te/articlecontent-pf875072-501874.html