வியாழன், 9 மார்ச், 2023

வந்தாரை வாழவைக்கும் நாம் ‘சென்றாரை’ மீண்டும் வரவழைப்போம்!


டமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படவில்லை என்றும், தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகளும், அமைச்சரொருவரும் முதலமைச்சரும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

வ.மா.தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளார் நம் முதல்வர்.

இனி.....?

மூட்டை முடிச்சுகளுடன் ரயிலேறித் தங்களின் ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வருவார்களா?

வராவிட்டால்.....?

தமிழ்நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும் என்பதாக இங்குள்ள, வ.மா.தொழிலாளர்களை வைத்துத் தொழில் நடத்துவோர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

ஆகையினால், ஓடிப்போனவர்களின் மீள்வருகையைத் தொழில் அதிபர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மிக்கக் கவலையுடனும் பேராவலுடனும் எதிர்பார்க்கிறது. 

ஒரு வேளை.....

அவர்களில் எவருமோ பலருமோ திரும்பாவிட்டால் நம் அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

கீழ்க்காணும் வகையில் இருக்கலாம் என்பது நம் பரிந்துரை. 

*அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அடங்கிய பல குழுக்களை உருவாக்கி, எந்தெந்த மாநிலங்களிலிருந்தெல்லாம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரிந்தார்களோ, அந்தந்த மாநிலங்களுக்கெல்லாம் குழுவினரை வகைபிரித்து அனுப்பி, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தி, தமிழ்நாட்டுக்குத் திரும்பிவருமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.

*இங்கிருந்து சென்றவர்கள் மட்டுமல்லாமல், மேலும் புதிய தொழிலாளர்களையும்  நம் செலவில் சிறப்பு ரயில்களில் அழைத்துவந்து பணியாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம்.

*வ.மா.தொழிலாளர்களின் நலம் காக்கப் புதிய துறை ஒன்றை உருவாக்குவதும் வரவேற்கத்தக்கதே.

===========================================================================================