கீழ்க்காணவிருப்பது புதிய தலைமுறையில் இன்று வெளியாகிக்கொண்டிருந்த செய்தி[பிற்பகல் 03.15 மணி]:
//மதுரையில், வேனில் ஆடு மாடுகளைக் கடத்திய வடமாநிலத்தவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது//
இதைப் படித்துவிட்டு, "இந்த வடக்கத்தியான்களால் இங்கே திருட்டு அதிகமாக நடக்கிறது” என்று எவரும் முணுமுணுக்காதீர்.
பாவம், அவர்கள். இங்கே கூலி செய்ய வந்தவர்கள். வேலை கிடைக்காததால், வயிற்றுப்பாட்டுக்காக இந்தத் திருட்டுத் தொழிலைச் செய்துவிட்டார்கள். அவர்கள் நம் அனுதாபத்திற்குரியவர்கள்.
அவர்கள் மீது யாரும் தாக்குதல் நடத்திவிடாமல் பாதுகாக்க வேண்டியது வந்தாரை வாழ வைக்கும் உயர் பண்புகொண்ட தமிழர்களாகிய உங்களின் கடமை என்பதை மறவாதீர்!
இயலுமாயின் அவர்களுக்கு வேலை தேடித் தருவீர்!!
===========================================================================