புதன், 5 ஏப்ரல், 2023

'மூளைப் புண்’... சிறு சிறு குறிப்புகள்.


மூளையிலுள்ள திசுக்கள் சேதம் அடைவதை ‘மூளைப் புண்’ என்கிறது மருத்துவ உலகம்.

மூளையின் எந்தவொரு பகுதியிலும் இது உருவாகலாம். புண் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம். 

சில நேரங்களில் இவற்றால் குறிப்பிடத்தக்கப் பாதிப்பு ஏதும் நிகழாமலிருப்பினும், பெரிய அளவிலான புண்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதும் உண்டு.

காரணங்களில் குறிப்பிடத்தக்கவை:

முதுமை, மூளைக்குள் அதிர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், மூளையில் தொற்று, மூளைக் கட்டிகள், மது அருந்துதல், சிகரெட் புகைத்தல் முதலானவை.

முதல் அறிகுறி: திடீர்த் தலைவலி.

பிற அறிகுறிகள் பின்வருமாறு:

*பசியின்மை, குமட்டல், வாந்தி.

*ஞாபக மறதி, மனக்குழப்பம்.

*கழுத்து வலி, வலிப்பு.

*செவித்திறன் குறைபாடு, பார்வை மங்குதல்.

*பேசுவதில் தடுமாற்றம், உறுப்புகள் தன்னிச்சையாக இயங்குதல்.

சிகிச்சைகள்:

*நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளைச் செலுத்துதல்.

*கதிர்வீச்சுச் சிகிச்சை.

*புண்ணின் தீவிரத்தன்மையைப் பொருத்து அறுவை மூலம் புண்ணை அகற்றுதல். 

நோய் அறிதல்: MRI மற்றும் CT இமேஜிங் ஆய்வுகள் புண்களின் அளவு, இடம் மற்றும் பண்புகளை அடையாளம் காண உதவுகின்றன. 

*** விரிவான தகவலுக்கு, https://healthlibrary.askapollo.com/tamil/brain-lesions-symptoms-causes-types-and-treatment/ என்னும் முகவரிக்குள் நுழைந்திடுக.

=====================================================