திங்கள், 26 ஜூன், 2023

‘பத்தரைமாற்று’ப் பகுத்தறிவாளர் சித்தராமையா!

ர்னாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவைக்கு[விதானசவுதா] வருகைபுரிந்தார் கர்னாடக மாநில முதல்வரான சித்தராமையா.

ஆலோசனைக் கூட்டம் முடிந்து அவருடைய அலுவலகத்திற்குச் சென்றபோது, அதன் தென்புறக் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்ட அவர், அதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

வாஸ்து சரியில்லை என்று அறியப்பட்டு அது மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

கடும் அதிர்ச்சிக்குள்ளான முதல்வர், “இருப்பிடத்திற்கு நல்ல வெளிச்சமும் காற்றும்தான் மிக அவசியமானவை[வாஸ்து பார்க்கத் தேவையில்லை]. நல்ல மனமும், நல்ல எண்ணங்களும்[மக்கள் மீதான அக்கறை போன்றவை] இருந்தால் நாம் வாழும் குடியிருப்பு முதலான எல்லாமே நல்லவையாகவே அமையும்” என்று அறிவுறுத்தினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதை வெறும் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல், அறையின் தென்புறக் அகதவைத் திறக்கச் சொல்லி, அந்த வழியாகவே அறைக்குள் நுழைந்தார் கர்னாடகா முதல்வர் சித்தராமையா என்பது பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைப் பெருமிதப்படவைக்கும் அரிய நிகழ்வாகும்[தினகரன், 25.06.2923]ஆகும்.

இவரின் இந்த நடவடிக்கையை நாடெங்குமுள்ள தலைவர்களில் எவரும் பாராட்டியதாகத் தெரியவில்லை.

மக்களில் பெரும்பாலோர் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர் மூடநம்பிக்கைகளில் ஊறி வளர்ந்தவர்கள்; மூடநம்பிக்கைகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்பதே இதற்கான காரணம்.

கர்னாடக முதல்வர் தவிக்காக நடந்த போட்டியில், தீவிரக் கடவுள் பக்தரான சிவக்குமார்[துணை முதல்வர்] தவிர்க்கப்பட்டு,


100% பகுத்தறிவாளரான சித்தராமையா முதல்வர் ஆனது வரவேற்கத்தக்கது.

பகுத்தறிவாளரான இவரின் மக்கள் பணி நாளும் சிறந்திட வேண்டும் என்பது நம் மிகு விருப்பம்!


தொடர்புள்ள இடுகைகள்: