காசியில் தமிழின் சிறப்புகளைப் பறைசாற்றுதற்கென்று மாநாடு நடத்தியது, சொற்பொழிவாற்றும்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவது, சங்கப் பாடல் வரிகளை எடுத்தாள்வது, பயணிக்கும் நாடுகளிலெல்லாம் மறவாமல் அதன் பெருமை பேசிப் பெருமிதப்படுவது என்று பல வகையிலும் தமிழ் மொழிக்குப் புகழ் சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை.
அவர் செய்யும் அரசியல் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம் என்ற வகையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவரின் செயல்பாடுகளில், தமிழரிடையே செல்வாக்கும் பெறுவது உள்நோக்கமாக இருப்பினும் அதை நாம் பொருட்படுத்தாமல் அவரை மனதாரப் பாராட்டுதல் வேண்டும்.
மோடி அவர்களைப் பாராட்டுகிற அதே வேளையில், ‘பாஜக’ கட்சியிலுள்ள சில தறுதலைகள் தமிழுக்கு எதிராகச் செயல்படுவதை அவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுமாறு ‘த.நா.பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கோரிக்கை வைப்பதும் நம் விருப்பமாக உள்ளது.
ஒசூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஒரு கோயிலில் நடக்கவிருந்த குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழார்வலர்கள் கோரிக்கை வைக்க, அர்ச்சகர்கள், தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தலாம் என்று ஒத்துக்கொண்ட நிலையில்.....
மஞ்சுநாத், வினோத் என்னும் இரு சொறிநாய்கள்[பாஜக] தலையிட்டு, தமிழில் நடத்தக்கூடாது என்று கூறிக் குழப்பம் விளைவித்ததோடு, தமிழினப் பற்றாளர்கள் மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
அவர் தவறாமல் இதைச் செய்வார் என்பது நம் நம்பிக்கை. ஒரு வேளை.....
இதை அவர் செய்யத் தவறினால், தமிழின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட பிரதமர் மோடி அவர்களின் வெறுப்புக்கு அவர் ஆளாவார் என்பதை அவருக்கு நினைவுபடுத்துகிறோம்.