மண்ணில் வாழும் மனிதர்கள் தாம் செய்யும் புண்ணிய, பாவ காரியங்களுக்கு ஏற்ப, சொர்க்கத்தையோ நரகத்தையோ சென்றுசேர்வது உறுதி என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆன்மிகர்கள்.
இவர்கள் சொல்வது பொத்தாம்பொதுவாக.
தங்களின் செயல் மூலம் புண்ணியம் மட்டுமே சேர்ப்பவர் எவருமில்லை. அவர்கள் பாவ காரியங்களும் செய்பவர்களே.
அதாவது, அவர்கள் அதிக அளவில் நல்ல காரியங்களையும் குறைந்த அளவில் கெட்ட காரியங்களையும் செய்பவர்கள் என்று சொல்லலாம்.
அதே போல அதிக அளவில் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் கெடுதல்களையும் குறைந்த அளவில் நன்மைகளையும் செய்பவர்களும் உள்ளனர்.
இங்கே, ‘அதிக அளவை’ என்பதையும், ‘குறைந்த அளவை’ என்று குறிப்பிடுவதையும்யும் கணக்கிடுவதில் பெரும் சிக்கல் உள்ளது.
‘அதிகம்’ என்பது 50.01% என்றும், அல்லது அதனைவிடவும் அதிகமானது என்று கொண்டால், ‘குறைவு’ என்பதை, 49.99% அல்லது, அதனைவிடவும் குறைவானது என்று கொள்ளுதல் வேண்டும்[இதைத் துல்லியமாகக் கணக்கிடுவது, கடவுளுக்கு அல்லது, அவருக்கு நிகரான ‘ஜக்கி’ போன்ற அவதாரங்களுக்கு மட்டுமே சாத்தியமாகலாம்].
ஆக, இந்தைக் கணக்கீட்டிற்கு ஏற்ப, 50.01 என்னும் அளவிலோ, அதற்கும் கூடுதலாகவோ புண்ணியம் செய்பவர்கள் சொர்க்கம் சேர்வார்கள் என்பதும், 49.99 என்னும் அளவுக்கோ அதற்கும் குறைந்த அளவிலோ தீமை செய்பவர்களுக்கு நரகம் உறுதி என்பது தெளிவாகிறது.
இங்கே நமக்கு எழும் தீராத பெரிய சந்தேகம், 50% புண்ணியமும் 50% பாவமும் சம்பாதிப்பவர்கள்[அரிதாக இப்படி அமையலாம்] மரணத்திற்குப் பின்னர் சென்றுசேர இருப்பது சொர்க்கத்திற்கா, நரகத்திற்கா?
இரண்டும் இல்லையென்றால் இறந்த பிறகு வேறு எங்கு செல்வார்கள்?
கடவுள்களின் குருவான[சத்குரு] ஜக்கியிடம் கேட்டால் விடை கிடைக்குமா?!
கிடைக்கும்[அவருக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்பதால்]. பக்தக்கோடிகள் கேட்கலாமே!
* * * * *
***கடவுள், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் எல்லாம் இல்லையென்றால் சாமியார்களுக்குக் கோடி கோடியாய்ச் சொத்து சேர்க்க வழியே இல்லை!