அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 14 ஜூலை, 2023

தீட்சிதர்கள்... வழக்கு... நீதிபதி கேள்விக்கு மனுதாரர் பதில்? ஓர் அனுமானம்!


சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி வழிபடுவதற்குப் பக்தர்களைச் தீட்சிதர்கள் அனுமதிக்காத நிலையில், 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு அரசு ஓர் ஆணை பிறப்பித்தது.

அந்த ஆணை, கனகசபையில் ஏறிப் பக்தர்கள் வழிபட வழிவகுத்தது.

திருமஞ்சன விழாவின்போது, தீட்சிதர்கள் பக்தர்களை வழிபட விடாமல் தடுத்ததும், அரசு நடவடிக்கை எடுத்ததும், அவை தொடர்பான நிகழ்வுகளும் பலரும் அறிந்ததே.

இந்நிலையில்.....

ஆர்.என் ரமேஷ் என்றொரு நபர், தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில்.....

தடை விதிப்பதற்கு ஏதுவாக முக்கிய மூன்று காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது, ‘தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படும்’ என்பது. 

அதைக் கருத்தில்கொண்டு, “தீட்சிதர்களின் உரிமை எவ்வகையில் பாதிக்கப்படும்?[தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகாமல், அவர்கள் சார்பாக ஒரு தனி நபர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது ஏன்?” என்பது அவர் கேட்ட மற்றொரு கேள்வி] என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் நீதிபதி.

விசாரணை தொடரவுள்ள நிலையில், தீட்சிதர்கள் சார்பாக மனுதாரர் அளிக்கும் பதில் கீழ்க்காணும் வகையில் இருக்கலாம் என்பது நம் அனுமானம்... அனுமானம் மட்டுமே.

//கடவுள் சிலைகளுக்கு மந்திரம் ஓதி உயிரூட்டுவதும், உயிர் பெற்ற கடவுளைத் தொடுவதும், தொட்டுத் தொட்டு அலங்காரம் செய்வதும், நெருங்கி நின்று தீபாராதனை காட்டிப் பூஜை செய்வதும் வேத ஆகமங்கள் வாயிலாகக் கடவுள்[தில்லை நடராசர்] தீட்சிதர்களுக்கு வழங்கிய உரிமை. கனகசபையில் ஏறித்தான் பூஜை செய்ய முடியும் என்பதால் அங்கே ஏறுவதற்கான உரிமையும் அவர் அவர்களுக்கு மட்டுமே அருளியது.

அவர்களுக்கு மட்டுமே ஆன[மனிதர்களுக்கு இல்லை] இந்த உரிமையைப் பறிப்பதற்கு மனிதராய்ப் பிறந்த எவருக்கும் உரிமை இல்லை.

நீதிபதி அவர்களே, நீங்களும் ஒரு மனிதரே என்பதால், தீட்சிதர்களுக்கான உரிமை குறித்துக் கேள்வி கேட்பதற்குத் தங்களுக்கும் உரிமை இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவிக்கிறோம்//

இது நம் அனுமானம் ஆயினும், காலங்காலமாய், இப்படிச் சொல்லிச் சொல்லி, மன்னர்களையும் மக்களையும் நம்பவைத்து, சிதம்பரம் கோயிலை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தைத் தீட்சிதர்கள் தங்கள் வசமே வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையும்கூட!

                                           *   *   *   *   *

https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/how-will-dixithar-rights-be-affected-high-court-4037748.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhDb--SjJmoW8oRUdSGnTsz7KhQICiIQ2_vkoyZqFvKEVHUhp07M-zDQqdIB&utm_content=rundown