அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

இவர்கள் 99.99% முட்டாள்கள்! இவர்களைப் படைத்தவன் 100% முட்டாள்!!

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் கிழக்குக் கோபுரத்தின் மேல் பகுதியில் காரை பெயர்ந்து விழுந்துவிட்டதாம்.

நேற்றைய செய்தித்தாள்களில் சில[தினத்தந்தி, மாலைமலர், ஒன் இண்டியா இத்தியாதி] பக்தக்கோடிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்தி வெளியிட்டன.

கோயில் கோபுரக் காரை உதிர்ந்த தகவல் அறிந்ததும், அடுத்த சில நிமிடங்களிலேயே, சம்பந்தப்பட்ட நிருபர் அங்குச் சென்று பார்த்து, தன் பத்திரிகைக்குத் தகவல் அனுப்புகிறார்[செய்தி அளிப்பதில் பின்தங்கினால் பத்திரிகை விற்பனை பாதிக்கும்].

செய்தியைச் சுமந்து, விற்பனை செய்யும் கடைகளுக்கு வருகிறது பத்திரிகை. இது நடைமுறை.

குறுகிய அவகாசத்தில், பக்தச்சிரோமணிகள் அதிர்ச்சிக்குள்ளானது[அடியேனைப் போன்ற நாசகார நாத்திகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பர்] இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

ஆளாளுக்கு அடித்துவிடுகிறார்கள்.

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ‘தினப்புளுகன்’ ஆன தினமலர்க்காரர், ஓர் அறிவுஜீவியைப் பேட்டி கண்டு[‘பாஜக’ தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியாம். பெயர் மச்சேந்திரனாம்] அமங்கலச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது.....

//ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரம் மேல்பகுதி பெயர்ந்து விழுவது, ஆட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும்[ஒப்புக்கு நடுவண் ஆட்சியைச் சேர்த்திருக்கிறார்] நல்லது அல்ல. துர்நிகழ்வாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்//

கோயில் கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கட்டியவர் சர்வ வல்லமை படைத்தவரும், சகலவிதமான வசதிகளைத் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டவரும் ஆன அருள்மிகு ரங்கநாத சுவாமிகள் அல்ல.

அவர் நினைத்திருந்தால், யுகயுகாந்தரம் உள்ளளவும் சின்னஞ்சிறு சேதம்கூட ஏற்படாத வகையில் தனக்கான அந்தக் கோயிலைப் பத்தரைமாற்றுத் தங்கத்தால் கட்டியிருக்கலாம்.


அவர் அதைச் செய்யவில்லை[காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்].

குறை அறிவுள்ள அற்ப மானிடர்களால் கட்டப்பட்டது அந்தக் கோயில்.

எத்தனைப் பெரிய தொழிநுட்பம் கற்றவன் கட்டினாலும் காலப்போக்கில் அது சிதிலம் அடையத்தான் செய்யும்.

ஐந்தறிவுக்கும் மேலாக, 001% ஆறாம் அறிவு வாய்க்கப் பெற்றவன்கூட இந்த உண்மையைப் புரிந்துகொள்வான்.

இந்த நிகழ்வு ஆட்சியாளர்களுக்கு நல்லது அல்ல என்று சொல்லும் மாமூடன் மாமூடர் மச்சேந்திரனுக்கும், அடிமூடன் அடிமூடர் தினமலர்க்காரருக்கும் புரியாமல் போனது எப்படி?

இவர்களுக்குப் புரியாமலில்லை.

புரிந்துகொண்டே பொய் நம்பிக்கைகளைப் பரப்புவதன் உள்நோக்கம் திராவிடக் கட்சி ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்ல.....

மக்கள் முட்டாள்களாகவே இருந்தால்தான் இவர்களின் வசதியான வாழ்க்கைக்குப் பங்கம் நேராது என்னும் சுயநலமும்தான்!

* * * * *

https://m.dinamalar.com/detail.php?id=3396263