பக்கங்கள்

வியாழன், 2 நவம்பர், 2023

பாவம் இஸ்லாம் பெண்கள்! ஐயோ பாவம் மணமானவர்கள்!!

ஸ்லாம் பெண்கள் ‘ஹிஜாப்’ அணியுமாறு கட்டாயப்படுத்தப்படுவதற்கு, இஸ்லாமில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஆயிரம் காரணங்கள்[அவர்களின் மொத்த உருவமும் காம இச்சையைத் தூண்டும் என்பது ஒன்று] சொன்னாலும்,  மனசாட்சி உள்ள இஸ்லாம் ஆடவர்கள் அதை மறுக்கவே[மனதுக்குள்ளேனும்] செய்வார்கள்.

முழு உடலையும் மறைக்காமலே இச்சையைத் தூண்டாத வகையில் உடை உடுத்துவது 100% சாத்தியமே என்பதால், பிற மதத்தவர்கள் மட்டுமல்லாமல், மதச் சார்பற்ற நடுநிலைச் சிந்தனையாளர்களும் இதைக்  கண்டித்திருக்கிறார்கள்; நாமும் இது குறித்து நடுநிலை விமர்சனம் ஒன்றைப் பதிவு செய்துள்ளோம்[https://kadavulinkadavul.blogspot.com/2023/10/blog-post_24.html]. 

எத்தனை எத்தனை வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றாலும், சட்டங்கள் இயற்றப்பட்டாலும் ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தவரையும் கட்டுப்படுத்துபவர்கள் தம் பிடிவாதத்தைக் கைவிடமாட்டார்கள் என்பதால்.....

“பாவம் இஸ்லாமியப் பெண்கள்” என்று பிறர் அனுதாப்படுவது என்றென்றும் தொடரும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இஸ்லாம் பெண்களின் இந்த நிலை பரிதாபத்திற்கு உரியது என்றால், மணமான பெண்களின் நிலை ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்டதாகும்.

வீட்டிற்கு வெளியே, ‘ஹிஜாப்’ அவர்களை, ‘அடிமைகள்’ முத்திரை குத்தி அவமானப்படுத்துகிறது என்றால், வீட்டுக்கு உள்ளேயும் ஒருவருக்கு மனைவியாக வாழும் உரிமையை, காலம் கருதாமல், சூழலையும் பொருட்படுத்தாமல் கணவனால் சொல்லப்படும் ‘தலாக்’ பறிக்கிறது என்று சொல்லலாம்.

“தலாக்... தலாக்... தலாக்” சொல்லப்பட்டு ஆதரவற்றவர்களாக வாழும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கக்கூடும். அது குறித்தக் கணக்கெடுப்புக்கு அந்தச் சமுதாய ஆண்கள் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

ஆகவே, ஆதாரங்கள் பல தருவது சாத்தியப்படாத நிலையில்.....

அண்மை நிகழ்வொன்றை இங்குப் பதிவு செய்கிறோம்.

//குல்சைபா என்ற பெண்[கான்பூர்], சலீம் என்பவரை 2022இல் மணந்துள்ளார். வேலை காரணமாக 2023 ஆகஸ்ட் 30ஆம் தேதி சலீம், சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட, குல்பைசா கான்பூரிலேயே இருந்திருக்கிறார்.

அக்டோபர் 4 அன்று தனது மனைவியோடு பேசுவதற்கு வீடியோ காலில் வந்த சலீம், மனைவியின் புருவத்தைக் கண்டதும் கோபமடைந்தார். “நீ ஏன் புருவத்தைத் திருத்தம் செய்தாய்?” என்று கேட்டிருக்கிறார். “புருவத்தில் அதிகமாக இருந்த முடி அழகைச் சிதைத்ததால் ‘ட்ரிம்’ செய்தேன்” என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

எவ்விதச் சமரசங்களுக்கும் இணங்காத சலீம், “என் விருப்பத்தைக் கேட்காமல் இதைச் செய்திருக்கிறாய்[தலைமுடியை நறுக்குவதும், கால் நகத்தை வெட்டுவதும்கூடக் குற்றமோ?]. இன்று முதல் உன்னைத் திருமணப் பந்தத்தில் இருந்து விடுவிக்கிறேன்' என்று கூறி வீடியோ அழைப்பில் மூன்று முறை தலாக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்//*

இது, திருமணமான ஒரு இஸ்லாம் பெண்ணின் வாழ்வில் நேர்ந்த பேரவலம்.


அதன் பிறகு எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் சலீம் போனை எடுக்காததால், மனம் உடைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் தன் கணவர் மற்றும் மாமியார் என ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார் என்பது நாம் அறியத்தக்க தகவல்.


தன் மனைவியை, வினாடி நேரத்தில் தலாக்கிய இந்த இஸ்லாம் ஆடவருக்கு, வெறுமனே ரசித்து மகிழத் தூண்டுகிற ‘அழகு’ வேறு; இச்சையைத் தூண்டுகிற சரசமாடுதல், கவர்ச்சி காட்டுதல், அரைகுறை ஆடைகளில் ஆபாசமாகக் காட்சியளித்தல் போன்றவை வேறு வேறு வேறு என்பது தெரியாதா? தெரிந்துகொள்வதில் ஆர்வமே இல்லையா?


நீண்ட நெடுங்காலமாய், ஆடவர்கள் எத்தனை எத்தனைக் கட்டுப்பாடுகளை திணித்தாலும், அவர்களுக்கு அடங்கியே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இஸ்லாம் மதப் பெண்கள்.


கட்டற்ற சுதந்திரத்துடன் பிற பெண்கள் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில், புருவம் திருத்தியதற்குத் ‘தலாக்’ சொல்லுதல் போன்ற, மிகக் கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, இஸ்லாம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இஸ்லாம் சமுதாயத்தையே சீரழிக்கவல்லது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.


அல்லா[ஹ்]வை ஒரு நாளில் ஐந்து முறை தொழுபவர்களா இத்தகைய பாவச் செயல்களைக் காலங்காலமாய்ச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது நம்மை வியக்க வைக்கிறது!

* * * * *

மிக முக்கியக் குறிப்பு:

மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமியர் பலரும் அறிந்த ஒன்றுதான். இப்பதிவு ஒரு ‘நினைவூட்டல்’ மட்டுமே. இதன் மூலம் நாம் பெற்றிடும் நன்மை ஏதுமில்லை. [அரசியல்வாதியாக இருந்தால் தேர்தல் காலத்தில் ஓரளவுக்கேனும் இஸ்லாம் பெண்களின் வாக்குகளைப் பெறலாம்]. மாறாக, கேடுகள் விளைவது சாத்தியப்படலாம்!

* * * * *

*https://www.vikatan.com/humour-and-satire/current-affairs/woman-gets-eyebrows-shaped-husband-gives-triple-talaq-on-video-call?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCejf8KMN389wIw6LPkAQ&utm_content=rundown&gaa_at=la&gaa_n=AYRtylYjQw7IKRF6J9hh3uE_1BgzH9Mjy7lgBZL1pIGvhH74mouqErIPGB-KEwW-cIIm4Jnr_dMhKohgWJ63qdO3aLlq&gaa_ts=65428672&gaa_sig=LrECWC4Np0Tt9pmpeopG9vaAurLvmizypU5JY9SRkI9v_90fOEEEc0xqzbq2Um_RjE4NYljE838iT4rBKuXAlw%3D%3D