அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

காசியில் தமிழ்ச் சங்கமம் விழா! ஊர் சுற்றப்போகும் மோடியின் கொத்தடிமைகள்!!

வாரணாசியில் நடக்கவிருக்கும் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடக்க விழா[17.12.2023]வுக்குச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வாரணாசி  செல்லும் பயணிகளை வழியனுப்பி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் துவக்கி வைத்தார் -செய்தி[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kashi-tamil-sangam-program-opening-ceremony-pictures -15/12/2023]

இவ்விழா, காசித் தமிழ்ச் சங்கமத்தின் சார்பாக நடைபெறவுள்ள இரண்டாவது நிகழ்வு ஆகும். தமிழகம் & புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாராணசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்றுவரும் 8 நாள் பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது. https://arasiyaltoday.com/inaugural-ceremony-of-kashi-tamil-sangam-on-dec-17/

தமிழைச் சிறப்பிக்கிறோம் என்னும் பெயரில் மோடியின் 1400 கொத்தடிமைத் தமிழர்களுக்கு, மேற்கண்ட இடங்களை ‘ஓசி’யில் சுற்றிக் காட்டிக் ‘குஷி’ப்படுத்துவதோடு, இவர்களை வாரணாசியில் கூட்டிவைத்து[சங்கமம்], விழா என்னும் பெயரில் வாயளவில் தமிழைப் புகழ்வதன் மூலம், தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளை அள்ளுவது மோடியின் திட்டம்[தந்திரம்!].

ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் உள்ள வங்கி, ரயில் போக்குவரத்து, அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் இந்தித் திணிப்பையும் ‘இந்தி’யர் திணிப்பையும் கண்டு மனம் கொதித்துக் கிடக்கும் தமிழர்கள் ‘பாஜக’வைத் தேர்தல்களில் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி. அவர்களின் ஆதரவைப் பெற மோடி செய்யும் சூழ்ச்சி இது.

தொடரும் மோடியின் தமிழ்த் துரோக நடவடிக்கைகளை கிடப்பில் வைத்து[ஏற்கனவே கேட்கப்பட்டவை], இக்கணத்தில் நாம் முன்வைக்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி:

ஆங்கில மொழியில் உள்ள இந்திய அரசியல் சாசனக் கோப்புகளுக்கு அவசர அவசரமாக, வாயில் நுழையாத இந்திப் பெயர்களையும் சமஸ்கிருதப் பெயர்களையும் சூட்டிக் குதூகளிக்கும் மோடி, ஏதேனும் ஒரு கோப்புக்காவது தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கிறாரா[பிற இந்திய மொழிகள் உட்பட]?

இல்லை; இல்லவே இல்லை.

அப்புறம் எதற்குக் காசித் தமிழ்ச் சங்கமம் விழா, வாரணாசி வெங்காயத் துவையல் விழா, பக்திச் சுற்றுலா எல்லாம்?!

‘அடிமை ஏஜண்ட்’ அண்ணாமலைக்கு இந்தக் கேள்வி சமர்ப்பணம்!