பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 20 டிசம்பர், 2023

மனிதருக்கு மட்டுமே ஆறறிவு! ‘படைத்தவன்’ பண்பாளனா?!

னிதர்கள் மட்டுமே கடவுளை வணங்கி வாழ்த்தி வழிபடுகிறார்கள்,

மற்ற உயிர்கள் அதைச் செய்வதில்லை. காரணம், அவற்றிற்குக் கடவுள் என்று ஒருவர் இருப்பதோ, அவர் கருணை வடிவானவர் என்பதோ, வழிபட்டால் துன்பங்களை அகற்றி இன்பமாக வாழச் செய்வார் என்பதோ தெரியாது. 

‘மனிதர்களுக்கு மட்டும் சிந்திக்கும் அறிவு. மற்ற உயிர்களுக்கு அது இல்லை’..... கடவுள் படைப்பில் ஏன் இந்த ஓரவஞ்சனை[பாரபட்சம்]?

இக்கேள்விக்கு இந்நாள்வரை விடை கிடையாது[அந்த ரகசியம் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்பவன் உயிரினத் துரோகி; வஞ்சகன்].

“விடை அறியப்படாத இந்த அவல நிலையை அலட்சியம் செய்து, கடவுள் கருணை வடிவானவர் என்று சொல்லிக்கொண்டும், சொல்லப்படுவதை நம்பிக்கொண்டும் அவரைத் துதிபாடிக் கொண்டாடுபவர்கள் அத்தனை பேருமே முட்டாள்கள்; அயோக்கியர்கள்!” என்று நாம் சொல்லவில்லை. ஏற்கனவே.....

“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுள் நம்பிக்கையைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!” என்று பெரியார் சொல்லியிருக்கிறார்.

பெரியாரையும், அவரை வழிமொழியும் அயோக்கியர்களையும்[நாத்திகர்] கடவுள் தண்டிப்பார் என்று கடவுளை நம்பும் யோக்கியர்கள்[சங்கிகள்] சொல்லக்கூடும்.

நாம் கேட்கிறோம்.....

“நாம் நாத்திகர்களோ அல்லவோ, உங்கள் கடவுளின் படைப்பான இவ்வுலகில்தான் அடுக்கடுக்காய்க் கொடிய துன்பங்களை[இன்பங்கள் வெகு குறைவு] அனுபவிக்கிறோமே, இதைவிடவும் பெரிய தண்டனை உண்டா?”