‘பீகார் முதல்வரு[னு]ம் ஜேடியூ தலைவரு[னு]மான நிதிஷ் குமார் 'இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி' என்று வெறித்தனமாய்க் கூச்சலிடுவது தொடர் கதை ஆகிவருகிறது’ என்று வட இந்திய ஊடகங்களே செய்தி வெளியிடுவது கூர்ந்து கவனிக்கத்தக்கது[https://tamil.oneindia.com/].
“நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயனோடு ஆங்கிலமும் போய்விட்டது”[ஆங்கிலத்தால் நாம் பெற்ற... பெறும் பயன்கள் பல. இந்தியால் பெறுவது?] என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த ஆளுக்கு, இந்தியை இந்தியர் அனைவரும் ஏற்றுக்கொண்டால், இந்திக்காரர்களே இந்தியாவை ஆளலாம் என்பதில் அள்ளக் குறையாத கொள்ளை ஆசை.
இந்த நபரின் தாய்மொழிப் பற்று போற்றத்தக்கது. மொழி வெறியுடன் செயல்பட்டால்தான், இந்தி இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாகத் திணிக்கப்பட்டு, நான்கைந்து மாநிலங்களின்[மட்டும்] பெரும்பான்மையினராக இருக்கும் ‘இந்தி’யரான இவர்களே இந்தியாவை எப்போதும் ஆளலாம் என்பது இந்த வெறியனின்[இந்த நபர் விவேகியல்ல; வெறியன். மரியாதை தேவையில்லை] நப்பாசை... பேராசையும்கூட.
ஆளுபவர்களுக்குத் தேவையான அறிவாற்றலோ, உயர் பண்பாடோ, மாற்றாரையும் அரவணைத்துச் செல்லும் மனப் பக்குவமோ இல்லாத இந்தி ஆதிக்க வெறியர்களிடமிருந்து நம்மை[சூடுசொரணையற்ற பிற மொழிக்காரர்கள் நமக்கு ஒரு பொருட்டல்ல]த் தற்காத்துக்கொள்வது காலத்தின் கட்டாயம்.
இவர்களை எதிர்த்துப் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.
போராடுவதற்கு, தமிழர்கள் மொழிப் பற்றும் இனப் பற்றும் உள்ளவர்களாக இருந்தால் போதாது; மொழி & இன வெறியர்களாகவும் ஆதல் வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள தமிழர் கட்சித் தலைவர்கள்[இந்தி வெறியன் குமுறிக் கொந்தளித்தபோது மௌனம் காத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட] இதைக் கவனத்தில்கொண்டு ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.