எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 22 டிசம்பர், 2023

செத்துப் பிழைத்து ஞானி ஆகி ஈசனும் ஆன ரமண மகரிஷி!!!

15 வயதில் படிப்பு வராமல், ஊரைவிட்டு[திருச்சுழி] வெளியேறி, திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தவர் ரமணன்.

பக்தர்களின் தயவில் 69 வயதுவரை வாழ்ந்தவர் இவர்.

திடீரென ஒரு நாள் ஆவேசம் அடைந்து[?] செத்துப்போனாராம்.

செத்தவர் ஈசனாக மாறி, மனிதனாகப் பிறந்தாராம். ஞானியாகப் பலருக்கும் ஞானம் போதித்து வாழ்ந்தாராம்[இறந்து, பின்னர் ஞான நிலையை எய்தியதாகவும், தனக்கு உடல் கிடையாது என்றும் இவரே கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது[ரமண மகரிஷிக்கு தனது 16 வது வயதில், மரண உணர்வு ஏற்பட்டது. மரணத்தில் மரணிப்பது இந்த உடல்தான் என்றால், நான் யார் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இந்த தேடலே அவரை மகான் ஆக்கி, தெய்வ நிலைக்கும் கூட்டிச்சென்றது. -https://tamil.samayam.com/religion/hinduism/ramana-maharshi-quotes-mantra-for-attain-moksha/articleshow/99521548.cms?story=5].

ஆடை துறந்து, கோவணத்துடன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்; 99% அம்மணக் கோலத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ பக்தக்கோடிகளால் ‘ஞானி ஆக்கப்பட்டார்[ஞானம் என்றால் என்னவென்று விளங்கச் சொன்னவர் இவர் உட்பட எவரும் இல்லை].

உடம்பு இல்லாமல் கடவுளின் அவதாரமாக வாழ்ந்த இந்த மகானைப் புற்றுநோய்[கையில்]  தாக்கியது[ஞானியாக வாழ்ந்து தெய்வமாக ஆனவரைப் புற்றுநோய் தாக்கியது எப்படி?]. நான்கு முறை அறுவைச் சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.

1950இல் ஈஸ்வரனுடன் ஐக்கியமானார் இவர்[இன்றளவும் புத்தி கெட்ட தமிழரால் போற்றப்படும் அவதாரங்கள் பட்டியலில் இவருக்கு நிரந்தர இடமுண்டு].

இப்படியான இட்டுக்கட்டிய கதைகளுக்குத் தமிழில் பஞ்சமே இல்லை.

இன்றளவும் இம்மாதிரியான கதைகளைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பு நடத்துகிறது ஓர் அதி புத்திசாலிக் கூட்டம்!

                            *   *   *   *   *