பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 22 டிசம்பர், 2023

‘தமிழ் வளர்த்தல்’... இங்கே கிழிச்சாச்சி! அங்கே போய்க் கிழிக்கணும்!!

 “வடநாட்டில் தமிழ் வளர்க்க இந்தி கற்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்த தமிழிசைக்குப் புத்தி புகட்டிய பின்னூட்டக்காரர்கள்[கருத்துரைகளில் மாற்றமோ, பிழை திருத்தமோ செய்யப்படவில்லை]:

நாம்: தமிழ்நாட்டில் தமிழ் வளர்க்கத் தமிழிசை ஆற்றிய தொண்டு கொஞ்சநஞ்சமல்ல! அங்கே தமிழ் வளர்க்கப்போகும் அம்மணியை வரவேற்க இரு கரம் கூப்பிக் காத்திருக்கிறான் வடநாட்டான்! ஜெய் தமிழிசை!!

MOHAMED MEERASA1h 

மதிப்பிற்குரிய திரு குமரி அனந்தன் அவர்கள் எந்தளவுக்கு தாய் மொழியை ஈடுபாட்டுடன் நேசித்து அதன் காரணமாக தன் மகளுக்கு தமிழிசை என பெயர் வைத்திருப்பார் என்பதை உணர வேண்டும். அந்நாளில் மனிஆர்டர் மட்டுமே பண பட்டுவாடா தொடர்பாக இருந்தது. மத்திய அரசு மனிஆர்டர் விண்ணப்ப பிரதியை ஹிந்தியில் மட்டும் அச்சடித்து விநியோகித்துக்கு கொண்டு வந்த நிலையில் திரு குமரி அனந்தன் அவர்கள் நாடுளும் மன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்து தமிழில் மனிஆர்டர் வெளிவர செய்த பெருமைக்குரியவர். எந்த மொழியையும் கற்று கொள்வதில் தவறுஇல்லை. அதேசமயம் எந்த மொழிக்கும் நம்முடைய தாய் மொழியை அடிமை படுத்தக்கூடாது என்பதை உணர வேண்டும். நம் நாட்டில் ஹிந்தி ஆட்சி மொழி என்பது தவறான வாதம். 1948 ஆண்டு அரசியல் அமைப்பு ஆட்சி மொழி எது என்பதை தீர்மானிக்கின்றபோது ஹிந்தி ஆட்சி மொழி என்பதை முன் மொழிந்தார்கள். உடனடியாக தமிழ் நாட்டிலிருந்து ஒரு குரல் எதிர்ப்பினை பதிவு செய்தது. பன்முக தன்மை கொண்ட நம் நாட்டில் ஒருமொழி ஆட்சி மொழி ஆக முடியாது அப்படி ஒரு மொழி தான் ஆட்சி மொழி ஆக வேண்டுமென்றால் வளமையும் இலக்கண இலக்கிய மொழி மூத்த மொழியாம் தன்னகரில்லா தனித்துவம் பெற்ற எம்மொழி தமிழுக்கு மட்டும்தான் தகுதி உண்டு என வாதிட்டு தீர்மானத்தை முன் மொழிந்த பெருமை கண்ணியம் மிக்க காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை சாரும். பல கூட்டங்கள் பல வெட்டு தீர்மானங்கள் காரசாரமான வாதங்கள் இறுதியாக முடிவுக்கு வருவதற்காக வாக்கெடுப்பு பின் தமிழும் ஹிந்தியும் சமமான ஓட்டுக்களை பெற்றது. தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் அவர்கள் தன்னுடைய வாக்கை பயன்படுத்த முற்பட்டபோது தலைவருக்கு வாக்குரிமை கிடையாது என்பதை வலியுறுத்தி ஒப்புக்கொள்ள செய்ததும் திரு இஸ்மாயில் சாஹிப் அவர்கள் மட்டும்தான். இந்நிலையில் மறைந்த நம் நாட்டின் முதலாவது பிரதமரும் இந்தியாவிடுதலையின் பிதாமகனும் உலகளாவிய சமாதான ஐபெரும் தலைவர்களுள் ஒருவரான பண்டித ஜவஹர்லால் நேரு குறுக்கிட்டு ஹிந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக தொடரும் என்ற உத்திர வாதத்தின் அடிப்படையில் ஆட்சி மொழி சட்டம் முடிவுக்கு வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் பீகாரின் முதல்வராக அமர்ந்துள்ளவர் கூறுகின்ற வார்த்தைகள் சட்ட முன்வடிவை அறிந்ததில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. 1965 ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போர் முடிவுக்கு வராத ரணகள நிலையில் தகவல் தொடர்பு ரேடியோ அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் அரசியல் வாதங்களில் தலையிடுவது மாண்புக்குரிய ஒன்றல்ல ஆக உங்களுடைய கருத்து ஏற்கத்தக்கதா இல்லையா என்பதைவிட தவிர்த்துக்கொள்வது சால சிறந்தது என்பது என்னுடைய கருத்து.

ருத்ரப்ரியன்2h

மேடம் :: LANGUAGE IS NOT KNOWLEDGE :: இது KNOWLEDGE உள்ளவர்களுக்கு புரியும் உங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் தான் , ஆங்கிலம் படித்த தாள் தான் எங்கள் மாக்கள் ஏன் ஆரிய பிராமின் கூட வெளி நாடு சென்று வேலை செஇகிறான் நாங்கள் ஹிந்தி கற்றுக்கொண்டு பானிபூரி விற்கணும் அது தான் NEET இல்லாமல் PAAS ஆனா Dr நீர் சொல்லுவது

3ShareReply

Anbu3h

என்ன வந்தது கேடு! ஹிந்தியையும் - கண்டாரையும் மகிழ்விக்க தானா ! அவளுக்கு தமிழின தலைவர் திருமணம் முடித்து வைத்தார் - தமிழ் பாசக்கார அப்பா .... குமரி ஆனந்தன் தமிழிசை என்று பெயர் வைத்தார் - இந்திக்காரனுக்கல்லவா இசைக்கிறாள் புல்லாங்குழல் -

3ShareReply

Anbu3h

தஇச்சை செளந்தர் .... நீயேன் அடிக்கடி ஹிந்திக்காக கொடி பிடிக்கிறாய்!! இந்திக்காக எறும்பாய் உழைக்கிறே! தமிழ் என்றால் உறும்புறே? அவ்வளவு இனிப்பா இருக்கா ? அவர்களின் கரும்பு! குறும்பு!

edited

3ShareReply

த.வெள்ளைத் துரை4h

வலுவான தலைவர் இந்தி மொழி தெரிந்தால்தான் உருவாக்க முடியும் என்றால் என்னை உருவாக்குங்கள் நான் வட இந்தியாவில் பல ஆண்டுகளாக இருக்கிரேன்.சரளமாக இந்தி பேசுவேன்.இந்தியாவின் பல மாநிலங்கள் சென்று வந்துள்ளேன்.அரசியல் அறிவும் உள்ளது .இந்திக்காரனை பற்றிய புரிதல் அறிவும் உள்ளது .உங்கள் பணத்தை கொட்டி வலுவான தலைவராக என்னை உருவாக்குங்கள் ஏனனில் இந்தி தெரிந்தால்தானே உருவாகமுடியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் .முதலில் உங்கள் பெயரை தமிழிசை என்பதை மாற்றுங்கள் .என்னை போல பல எரம் தமிழர்கள் வட இந்தியாவில் வாழ்கிறார்கள் .முதலில் எங்களை உருவாக்குங்கள் தமிழ் நாட்டில் ஏன் வலுவான தலைவர்களை உருவாக்க இந்தி படிக்கச் சொல்கிறீர்கள் .இந்தி ஒரு மொழி அல்ல அது உடல் மொழி பழக்க மொழி நாலு மாதம் இங்கு வேலை செய்தால் போதும் அதை கற்க வேண்டியதில்லை அது தானாக வரும் .

2ShareReply

சிவபெருமான்5h

[ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி. அந்த அந்நிய மொழியை கற்பதற்குப் பதிலாக நாம் நமது நாட்டில் இருக்கும் ஒரு மொழியையே கற்றுக் கொள்ளலாமா.. இந்தி கற்காமல் இருந்ததால் தான் நம்மால் வலுவான ஒரு தலைவரை தேசியளவில் அனுப்ப முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.]

ரோசம் இருந்தால் உன் அடுத்த தலைமுறை வாரிசுகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க அனுமதிக்காமல், இந்தி வழிக்கல்வியில் பயிற்றுவிக்க வை.

6ShareReply

சிவபெருமான்5h

வாயை 3டடி

5ShareReply

Anbu5h

வட மாநிலங்களில் ஹிந்தி வளர்க்க யார் யார் போறாங்களோ! அவங்களுக்கு ஹிந்தி தெரிஞ்சா போதும் - பூஜாரிக்கு சமஸ்கிரதம் தெரிஞ்சா போதும் - கல்யாணம் முடிஞ்சிடும்! மோஷடிபாபா பிரான்ஸ் போறாண்டி ... பிரெஞ்ச் கற்று கிட்டா போனாண்டி! சவூதி போனாண்டி! அரபி மொழியை கற்று கிட்டா போனாண்டி! தமிழும் - இந்தியும் தெரிஞ்ச மேதைகள் வெளி மாநிலத்துல எவ்வளவோ பேர் இருக்காங்க! ... ஆமாண்டி நீயேன் ஹிந்திகாரன்ட் புடிச்சிகிட்டே உறுவுறே! ! .... பேற மாத்து ஹிந்தி கானா - செந்தர்யா னு மாற்றிக்கோ!

5ShareReply

Deva Ananth5h

இவா ஒரு முழு பைத்தியமாவே மாறிட்டா...

8ShareReply

Muthu6h

பெரிய அறிவாளியும் அம்மணி. ஹிந்தியை மறைமுகமா வளர்க்கிறோம் என்று பெருமிதம் வட நாட்டு கைக்கூலிக்கு. மூடிக்கிட்டு உங்க வேலை என்னவோ அதை பார்த்துக்கொள். தமிழ் ஒன்றும் உன்னை போன்ற பன்னாடைகள் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் எப்போதும் எங்கேயும் வளர்கிறது மதிக்கப்படுகிறது. இவ்வளோ பேசுறே நீ, உன் கேடிக்கு சொல்லு வட நாட்டில் தமிழ் மொழியை ஒரு பாட மொழியா அறிவிக்க.

8ShareReply

Raj6h

இதெல்லாம் ஒரு பொளப்பு.. இதுக்கு பதில் ...

9ShareReply

ramanan6h

தென் இந்தியாவில் ஹிந்திய வளர்க்க முதலில் வட இந்தியர்கள் தமிழை கற்க வேண்டுமில்லயா மேடம் ??? நீங்கள் சொன்ன வார்த்தைகளிலிருந்து ...

10ShareReply

ramanan6h

தென் இந்தியாவில் ஹிந்தி வளர்க்க முதலில் அவர்கள் தமிழ் கற்க வேண்டும் இல்லையா மேடம், நீங்கள் சொன்ன வார்தைகைளிலிருந்து ...

6ShareReply


Saravanan6h

தமிழை வளர்க்கவேண்டிய அவசியம் உங்களுக்கு தேவையில்லை, அது பழமையான செம்மொழி இன்றுவரை எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் சிறப்பாக இருக்கிறது. நீங்கள் திட்டமிட்டு செய்யும் இந்தி திணிப்பை நிறுத்தினாலே தமிழ் நீடுடி வாழும்.
வடக்கே இந்தியை திணித்ததனால்தான் அங்குள்ள போஜ்பூரி, மத்திலி, ராஜஸ்தானி, மார்வாரி, குஜராத்தி, மராத்தி, அஸ்சாமி, உள்ளிட்ட இந்திய மொழிகள் அழிந்து வருகின்றன. இதுபோன்ற ஒரு நிலைமை எண்களின் தமிழுக்கும் வந்துவிடக்கூடாது என்பதனால்தான் தமிழர்கள் காலம் காலமாக இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள். இதேபோல் வடக்கத்திய மாநிலங்கள் அந்த இந்தியை எதிர்க்காததன் விளைவாக தங்களின் தாய்மொழியை இழந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அவர்களின் தாய்மொழி எதுவென்றே தெரியாமல், இந்திதான் தாய்மொழி என்னும், அவலநிலைக்கு சென்றுள்ளார்கள்.
தமிழிசை கவனத்திற்கு:
இந்தி ஒரு இயற்கையான மொழி அல்ல. உருது மற்றும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்த செயற்கை மொழிதான் இந்தி.
முஸ்லீம் வெறுப்பு அரசியல் செய்யும் சங்கிகள், உருதுமொழியான இந்தியை தூக்கிப்பிடிப்பது ஏனோ ? ! ? !

7ShareReply

johnson7h

மராத்தியர்கள் இந்தி பேசுகின்றனர். எத்தனை இந்தி வாலாக்கள் மராத்தி கற்றுக் கொண்டுள்ளார்கள்

7ShareReply

chandrankumarjohnson6h

முட்டாள்தனமானது தமிழிசையின் வாதம் வடவர்கள் தமிழ் கற்கவும் வேண்டாம். தமிழனுக்கு ஹிந்தியும் வேண்டாம், ஆங்கிலம் ஒரு சர்வதேச உலக மொழி. அது மிகவும் அவசியம். தமிழிசை உளறுவதை நிறுத்த வேண்டும்.

8ShareReply

வாழு வாழவிடு7h

இந்திய வளர்க்க என்னென்ன சொல்றாங்க பாருங்க ... கம்பி கற்ற கதையெல்லாம் யாரு கேட்டா ?

4ShareReply

ஹிந்தி வளர்க்க இல்லை ப்ரோ வயிறு வளர்க்க ...

2ShareReply

lala7h

தமிழநாட்டிற்கு பிழைக்க வரும் வடக்கர்கள் முதலில் தமிழை கற்றுக்கொண்டு தமிழில் பேச வேண்டும்.