ஞாயிறு, 31 டிசம்பர், 2023

தீபாராதனை காட்டும் தீட்ஷிதன்கள் தில்லை நடராசனின் செல்லப்பிள்ளைகளா?!?!

கோயிலில், புரியாத மந்திரம் சொல்லி வயிறு வளர்க்கும் ஒரு கும்பல்[தீட்ஷிதன்கள்] கோயிலையே சொந்தமாக்கிகொண்டது உலக அதிசயங்களில் ஒன்று.

சிதம்பரம் நடராசன் கோயிலைக் கட்டியவர்கள் தமிழ் மன்னர்கள். அவ்வப்போது அதைப் புதுப்பித்துப் புது மெருகூட்டியவர்களும் அவர்களே. பொருளோடு கடும் உடலுழைப்பும் தந்து அவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தமிழர்கள்; தீட்ஷிதன்கள் அல்ல.

எங்கிருந்தோ வந்து, மந்திரம் தந்திரம் எல்லாம் செய்து மன்னர்களின் ஆதரவுடன் மணியடிக்கும் உரிமை பெற்ற இந்த வந்தேறிகள்[சிறு கூட்டம்], தமிழை அவமதித்தும் சமஸ்கிருதத்தைக் கோயில் மொழி ஆக்கியும் அடிக்கும் கொட்டமும் செய்யும் அட்டூழியங்களும் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற வழக்கொன்றில், செல்வி செயலலிதா அம்மையார், நல்ல வக்கீல் வைத்து வழக்கு நடத்தாததால், கோயில் தொடர்பாகத் தங்களுக்கான, வேண்டத்தகாத சில உரிமைகளை[‘நிரந்தரப் பூசாரிகள்’ முதலியன] தக்கவைத்தது இந்த மிகச் சிறுபான்மைக் கூட்டம்.

அப்போதைய நடுவணரசு எதையும் கண்டுகொள்ளாத நிலையில், வட மாநிலத்தவர் ஆதரவில் நடுவண் ஆட்சியைக் கைப்பற்றிய ‘பாஜக’ இவர்களுக்கு முழு ஆதரவளித்தது; அளிக்கிறது; கனகசபை ஏறி வழிபடும் உரிமை பக்தர்களுக்கு உண்டு என்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அலட்சியப்படுத்தி அதைப் பூட்டி வைக்கும் தைரியத்தைத் தீட்ஷிதன்கள் பெற்றிட[https://www.dinamani.com/tamilnadu/2023/dec/31/minister-sekar-babu-on-chidambaram-temple-issue-4131444.html]க் காரணம் இந்தப் பாஜக&சங்கிகளின் தூண்டுதல்தான்.

இந்நிலையில்.....

‘தமிழில்தான் வழிபாடு நடத்துதல் வேண்டும். மணியடித்துத் தீபாராதனை காட்டுவதைத் தவிர இந்தத் தீட்ஷிதன்களுக்கு வேறு எந்தவொரு உரிமையும் அளிக்கப்படுதல் கூடாது’ என்பதை நடைமுறைப்படுத்துவதென்பது, தமிழ் நாடு அரசு எத்தனை முயன்றாலும் இப்போதைக்குச் சாத்தியம் ஆகாது; ஆகவே ஆகாது.

அது சாத்தியம் ஆக வேண்டுமானால், கடவுளை வணங்குவதைத் தவிர, கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளிலிருந்து[ஆருத்ரா தரிசனம், அர்த்தராத்திரித் தரிசனம் முதலாயின] தமிழர்கள் விடுபடுதல் மிக அவசியம்.

விடுபட்டு, புத்தறிவு பெற்றுப் பெரும் போராட்டங்கள் நடத்தினால் மட்டுமே சிதம்பரம் தீட்சிதன்களின் பிடியிலிருந்து தில்லை நடராசன் கோயிலை மீட்பது சாத்தியமாகும்.

தமிழர்கள் விழிப்புணர்ச்சி பெறாதவரை சிதம்பரம் தீட்ஷிதன்களின் காட்டில் அடைமழை விடாது பெய்துகொண்டிருக்கும்!