அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 30 டிசம்பர், 2023

பிற மதங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த ராமர் கதை போதுமா?!?!

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி[2024] 22ஆம் தேதி நடைபெற உள்ளது’ என்பது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அண்மைச் செய்தி.

ஆக, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கான ‘அயோத்தி கோயில்’ஐக் கட்டிமுடிக்கும் பணி ஏறத்தாழ நிறைவேறியுள்ளது என்றே சொல்லலாம். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராமபிரானின் பக்தர்கள், பித்தர்கள் ஆகியோரின் சிந்தனைக்கு, ‘ராமபிரான்’ தொடர்பான சில கருத்தாக்கங்களை முன்வைக்கிறோம்.

எவரொருவரும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளை உள்வாங்கிச் சிந்திப்பார்கள் என்பது நம் நம்பிக்கை.

இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்; அயோத்தியின் ‘இச்வாகு குல’ அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். இவர்[இராமர்] 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்[கவனத்தில் கொள்க]. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றிப் பலரும் ஆராய்ந்திருக்கிறார்கள். இது குறித்துக் கருத்து வேறுபாடுகள் உண்டு. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

ராமர் பிறந்தது 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மீண்டும் நினைவுகூர்க.

மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதர்கள் ஒருங்கிணைந்து குழுக்களாக வாழத் தொடங்கினார்கள். மொழியை உருவாக்கி எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதும் அப்போதுதான்; இணைந்து வேட்டையாடுவது, அதற்கான கருவிகளை உருவாக்குவது, குடிசைகளை[வாழ்விடங்கள்] அமைப்பது, இறந்தவரைக் குழி தோண்டிப் புதைப்பது போன்ற அறிவு சார்ந்த செயல்களில் ஈடுபட்டதும் அக்காலத்தில்தான் என்பனவற்றை ஆராய்ச்சியாளர்கள் உரிய ஆதாரங்களுடன் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

இவை நிகழ்ந்தது 3,00,000[மூன்று லட்சம்] ஆண்டுகளுக்கு முன்புதான் என்னும் நிலையில், 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித சமுதாயத்தவரால் பெரியதொரு நாடு[அயோத்தி] உருவாக்கப்பட்டு, அதை ஒருவர்[ராமர்] ஆண்டார் என்பது ஏற்கக்கூடியதா?

‘50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் உருவானது. மக்கள்தொகை பெருகியது. திடீரென ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை ஆய்வர்கள் கண்டுபிடிக்க முயன்றும் முழுமையாக வெற்றி கிட்டவில்லை’ என்று ‘மானுட இனத் தோற்றமும் வளர்ச்சியும்’ குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள்.

மனித நாகரிகத்தின் மறுமலர்ச்சிக் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள்தான் என்னும்போது, 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பே, அத்தகையதொரு மறுமலர்ச்சி அயோத்தி மக்களுக்கும் மன்னர்களுக்கும்[ராமர் உட்பட] வாய்த்திருந்தது என்பது 100% இட்டுக்கட்டிய கதையாகும்.

பூமியில் மனித இனம் தோன்றிச் சில லட்சம் ஆண்டுகளே ஆன நிலையில், [https://www.hindutamil.in/news/opinion/columns/222552-.html] ராமர் என்றொருவர் அயோத்தியை அறநெறி தவறாமல் ஆண்டார்[12.00.000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு] என்பதாக வால்மீகி புனைந்துரைத்த[100% கற்பனை] கதையை நம்புவதும், அதைப் பரப்புரை செய்து செய்து செய்து மக்களை நம்ப வைப்பதும் மனசாட்சி உள்ளோர் செய்யும் செயலல்ல என்பது நம் எண்ணம்.

முனைப்புடன் ராமரின் புகழ் பரப்பும் பெரியோர்களிடம் நாம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி:

“இஸ்லாம் வளர்கிறது; கிறிஸ்தவம் வளர்கிறது. அவை இங்கே ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின்றன என்றால், அவற்றைத் தடுப்பதற்கு, ஒரு கற்பனைக் காவியக் கதைக் மாந்தனைத் தூக்கிச் சுமப்பதுதான் வழியா? வேறு சிறந்த நல்ல வழிகளே இல்லையா?”