சர்வதேச நீரிழிவுச் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, உலகில் சுமார் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050 ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை, 1.3 பில்லியனுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது[தகவல்: தி லான்செட் நீரிழிவு மற்றும் எண்டோகிரைனாலஜி இதழ்].
மித வேக நடையல்ல, வேக நடையே இந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த வழி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
*ஒரு மணி நேரத்திற்கு 3 கிமீ(1.86 மைல்) வேகத்தில் நடந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
*5 கிமீ முதல் 6 கிமீ வரையிலான மிகவும் விறுவிறுப்பான நடைப் பயிற்சி, இந்நோயினால் விளையும் பாதிப்புகளைக் குறைக்கும்.
*மணிக்கு 6 கிமீ(3.7 மைல்)க்கும் அதிகமான வேகத்தில் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு நோயின் ஆபத்து மேலும் குறையும்.
*டைப் 2 நீரிழிவு நோயாளிகள், ஒரு மணி நேரத்திற்கு 3 கிமீ முதல் 5 கிமீ வரை வேகமாக நடந்தால், நீரிழிவின் பாதிப்புகள் 15% குறையும்.
*வேக நடையால், உடல் தசைகள் வலுவடையும்; ஒட்டுமொத்த உடலின் நலம் மேம்படும்.
*நடைப் பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்குவது ஒருபுறம் இருக்க, தினம் தினம் பணிக்குச் செல்லும்போதும், நண்பர்களைச் சந்திக்கவோ கடை வீதிக்கோ செல்லும்போதும் வேகமாக நடந்து செல்வதை வழக்கமாக்கிகொள்வதால் நீரிழிவு நோயால் உண்டாகும் தீங்குகள் மேலும் குறையும்.
ஆகவே,
நீரிழிவு நோய் இருப்பினும் இல்லையெனினும், அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வோர் மிதமான வேகத்தில் நடப்பதைக் காட்டிலும், வேகமாக நடக்கப் பழகுவது வரவேற்கத்தக்கது.
* * * * *
***Doctors reveal the one daily change people can make to lower diabetes risk (msn.com)