பக்கங்கள்

வெள்ளி, 5 ஜனவரி, 2024

மோடிக்குக் ‘கொத்து’ப் புரோட்டா கொடுத்த ‘பூரி’ சங்கராச்சாரியன்!!!

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலைக்கு உயிரூட்டுவது['பிரதிஷ்டை’] குறித்த செய்தி ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது.

இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனவாம்.

மேலும்,

பல முக்கியத் தலைவர்களுக்கும், ஆன்மிகப் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்.....

மோடியின் ஆதரவாளர்களுக்குக் கடும் அதிர்ச்சி தரும் வகையில், “ராமர் சிலையைத் தொட்டுப் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கையில் நான் கைதட்ட வேண்டுமா?” என்று கேட்டு அந்நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று, சனாதனவாதிகளின் கூட்டமொன்றில் பங்கு பெற்றபோது பேசியிருக்கிறது பூரி சங்கராச்சாரியன் சாமி.

சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்பதையும், மோடி தலைமையில் அது சாத்தியமில்லை என்பதையும் காரணங்களாகக் காட்டியிருக்கிறார் இந்த மகான்[பிரதிஷ்டை செய்வதற்கான உரிமையை இவரும் இவரைச் சார்ந்தவர்களும் பெற்றது எப்படி? என்று எந்தவொரு பக்திமானும் இதுவரை கேட்டதில்லை].

இப்படிப் பேசியதன் மூலம் இந்த நபர் மோடியைப் பெரிதும் அவமானப்படுத்தியுள்ளார் என்பதே நம் மக்களின் கருத்தாக இருக்கக்கூடும்.

ஆனால்,

அடியேனைப் பொருத்தவரை இந்த ஆசாமி நம் பிரதமரின் முகத்தில் காரித் துப்பியிருக்கிறார்[எச்சிலை] என்றே சொல்லத் தோன்றுகிறது.

மோடி அவமானப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவரின் அதீதப் பக்தியை நாம் குறை சொல்வது பண்பாடு அல்ல எனினும், கண்ட கண்ட போலிச் சாமியார்களை எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதற்கான தண்டனை இது என்று சொல்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை.

பூரியான் சொன்னது போல், மோடி ராமர் சிலையைத் தொட்டுப் பிரதிஷ்டை செய்வது உறுதிதானா என்பது நமக்குத் தெரியாது.

ஆயினும்.....

அவர் கண்டிப்பாகத் தனக்குத் தெரிந்த பக்திப் பாடல்களை[குஜராத்தி மொழியில்]ப் பாடி[ மோடிக்கு வேதமந்திரம் தெரியாதது ஒரு பிரச்சினை அல்ல] ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்திடல் வேண்டும் என்பது நம் விருப்பம். இது, பூரியின் முகத்தில் காறித் துப்பிய[பதிலடி] திருப்தியைத் தரும் என்பது உறுதி.

செய்வாரா நம் பிரதமர் நரேந்திர மோடி?

                                         *   *   *   *   *

https://www.hindutamil.in/news/india/1178961-puri-shankaracharya-says-wont-visit-ayodhya-and-rituals-must-conform-to-shastras.html