திங்கள், 10 ஜூன், 2024

மோடிக் கடவுளுக்கு வாழ்த்து!!![கடவுள் வாழ்த்து]

இந்த இந்திய நாடு உண்மையிலேயே புண்ணியப் பூமிதான்.

நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பயனாகத்தான் பகவானால் அனுப்பப்பட்ட மோடி{கடவுளோடு இரண்டறக் கலந்திருந்து தன்னுடைய பிரதிநிதியாக ‘அவரால் அனுப்பப்பட்டவர்’[மோடி சொன்னது] என்பதால் மோடியும் கடவுளே} இந்தத் தேசத்தின் பிரதமர் ஆகியிருக்கிறார்.

இனி இங்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை.

பசியால் வாடிப் பட்டினி கிடந்து மக்களில் எவரும் சாகமாட்டார்கள்.

வேளைக்கு ஒரு விலை மதிப்பில்லாத ஆடை மாற்றுவார்கள்.

சீனாக்காரனோ பாகிஸ்தான்காரனோ இனி வால் ஆட்டமாட்டான்கள்.

மோடி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்னும்  செய்தி உலகெங்கிலும் பரவிட, பிற நாட்டுப் பிரமுகர்கள், ஆசி பெறுவதற்கு  இவரைத் தேடி வருவார்கள்.

பிரதமரும் இவரே கடவுளும் இவரே என்பதால், இவரையே மக்கள் வழிபடுவார்கள். வேறு கடவுள்களுக்கு இங்கு இடமில்லை. 

இத்தளம் முடக்கப்படவிருந்த நிலையில், நேற்றுப் பிற்பகலில் 115 ஆக இருந்த ‘பார்வை’ எண்ணிக்கை, பின்னர் 207 ஆக அதிகரித்ததும், இப்போது[பகல் 13.42] 97 ஆக இருப்பதும் அவர் கருணையால்தான். அவரின்றி அணுவும் அசையாது.

இதைப் போன்ற அதிசயங்கள் மோடிக் கடவுள் ஆட்சியில் தினம் தினம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

அந்த நிகழ்வுகளைக் கண்குளிரக் கண்டு உவப்பதோடு சும்மா இருந்துகொண்டிருப்பது இயலாது; அவ்வப்போது பதிவுகள் எழுதி அவரைப் புகழ்ந்தாலொழிய மனம் அமைதி பெறாது.

ஆகவே.....

தளம்[கடவுளின் கடவுள்] முடக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மோடிக் கடவுளின் புகழ் பரப்பும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

கடவுள் மோடி வாழ்க! வாழ்கவே!!

[10.06.2014 பகல் 13.42]